August 03, 2016

சுஜூதின் தியான மகிமை மீது, வனப் பன்றிகளின் குணம்


-எம்.எல்.எம். அன்ஸார்-

03-08-1990 இரவு 07-45 மணி 
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
எனதிரு பள்ளிவாயல்களின் 
தொழும் தரைகளில் மையித்துக்களை சரித்து 
ஹவுளுகளை இரத்தத்தை ஊற்றி நிரப்பிவிட்டு
தப்பியோடியவர்களை துரத்தி எழுதுகிறேன்!
*
அழ்ழாஹ் ஒருவனைத் தவிர 
வேறெதுவுமே நினைவுக்கு வராத 
சுஜூதின் தியான மகிமை மீது 
வனப் பன்றிகளின் குணத்தை 
அள்ளிக் கொண்டுவந்து கொட்டி 
இன வெறியாடியவர்களின் 
மிருக உருவான முகங்களை நான் சரியாகக் கண்டேன்!
*
103 தொழுகையாளிகளின் புத்தம் புனித உயிர்களை 
துப்பாக்கிக் குழல் வைத்து 
பதறக் கதற உறிஞ்சிக் குடித்து 
குருதித் தாகம் ஆற்றிய மனித வெறிப் புலிகளின் 
காட்டு முகவரியை காட்டித்தர 
துணிவிருக்கிறது எனக்கு! 
*
இரவுச் சாப்பாடு சமைத்துண்பதற்காக 
சுட்டுக் கொன்று 
மனித சதைகளை 
குதறி வேட்டையாடிய போராளி(?)களின்
கொலை வீரத்தை 
காத்தான்குடிப் பள்ளிவாயல்களின் 
கிப்லாத் திசை சுவர்கள் 
சல்லடைகளாக சுவடு வரைந்து வைத்திருக்கிறன!
*
அரை மணிக்கும் குறைவான நேரத்தில் 
ஐம்பத்தியெட்டு விதவைகளை 
ஒரே குறிச்சியில் மாத்திரம் உண்டாக்கிய 
புலிகளின் உலக மகா கொடுமையை 
எனது ஊரின் "இத்தா" வீடுகள் 
வாசல் கதவோரம் தாங்கி நிற்கின்ற 
வரலாற்றுச் சோகம்! 
*
தொழுகை பழகிக் கற்கும் ஆன்மீக ஆர்வத்தில் 
மீரா ஜும்ஆ , ஹுசைனியா மஸ்ஜித்களுக்குச் சென்ற 
பாலகச் சிறுவர்கள் பதினைந்து பேர் 
இரத்தத்தில் மிதந்த 
நெஞ்சுடைந்த அகோரத்தை நிகழ்த்திவிட்டு 
ஓடியொளித்த ஆயுத அரக்கர்களின் 
மண் மூட்டைப் பதுங்கு குழிகளை தேடிச் சென்று 
குண்டு வீசிச் சிதறவைப்பதற்கு 
தேவையான கோபம் எனது சட்டைப் பைக்குள் இருக்கிறது!
*
அழகியவிரு இறை இல்லங்களிலும் 
அழுகுரல் கண்ணீர் நிரம்பி வழிந்தோடி 
முழு ஊருமே மூழ்கிப் புதைந்து போன பெருந்துயர்! 
சிவப்பாய் இருட்டுப்பட்டது காத்தான்குடியின் இவ்விரவு! 
*
எனது சாந்த இயல்பை 
இரத்தத்தால் அடுப்பு மூட்டி கொலைகளால் கொதிக்க வைத்த 
நரபலியர்களுக்கு எச்சரித்துச் சொல்லுகிறேன்!
ஐந்து நேர அவ்வல் ஜமாஅத் போன்று 
ஆயுதப் பயிற்சிக்குப் போய் வருவதும் 

ஆறாவது அவசியமாக ஆகிவிட்டது எந்தனூர் பொடியன்களுக்கு!

04-08-19905 கருத்துரைகள்:

செய்தவினைக்கு அந்த பன்றிகள் செத்து அழுகி 7 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது

அந்த வனப்பன்றிகளில் ஒன்று இப்போதும் உயிருடன் இருக்கின்றது

Well done. May All Mighty Allah forgive all the sins of these Marhooms and enter paradise. Aameen.

பிரார்த்தணையின் பலனறிய பாரிய ஈருதாரணங்கள் உண்டு நம்மருகே:

1. பாசிசப்புலிகள் விலாசாமில்லாமல் துடைத்தழிக்கப்பட்டமை.

2. நீதி தவறிய மன்னர் மஹிந்தர் பதவி குறைக்கப்பட்டமை!!

'இறைவன் நீதியாளர்களை நேசிக்கிறான்' -புனித குர்ஆன்


செய்தவினைக்கு அந்த பன்றிகள் செத்து அழுகி 7 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது
மிகுதி இருப்பவரகலையும் இறைவண்மேல் பாரத்தை வையுங்கள் அவன்பார்த்துக்கொள்வான்
இன்ஷா அல்லாஹ்,

Post a Comment