Header Ads



ஜனாதிபதி மைத்திரி, உதாசீனம் செய்கிறார் - மஹிந்த குற்றச்சாட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் கொள்கைகளை உதாசீனம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலரை நீக்கி புதிய அமைப்பாளர்களை நியமித்திருந்தார்.

இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இவ்வாறான நடவடிக்கையினால் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேற நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட போதிலும், பண்டாரநாயக்க  அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலமாக கட்சியின் செயற்பாடுகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.