Header Ads



நீதி, நீதியைத் தேடுகிறதா..?


(8 - اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ (سورة المائدة - 

பட்டாணி ராஸிக் கொலை - நீதி ஆள் தேடுகிறது.
வர்த்தகர் ஷியாம் கொலை - நீதி தீர்ப்பு தேடுகிறது.

வஸீம் தாஜுதீன் கொலையா?? விபத்தா?? - நீதி வித்தியாசம் தேடுகிறது
வர்த்தகர் ஸகீப் ஸுலைமான் கொலை - நீதி நீதியைத் தேடுகிறது.

உலகில் நீதி உள்ளதா... அச்சம் வேண்டாம்...
நீதி எமது பரம்பரைச் சொத்து... கவலைப் பட வேண்டாம்...

பாத்திமா களவெடுத்தலும் கை வெட்டப்படும்... நீதி வெட்டப்படாது...
கவர்னரின் மகன் அடிமையை அநியாயமாக அடித்தாலும்.. உமரின் நீதியில் அநியாயம் அடிக்கப்பட மாட்டாது... 

வா முஃதஸிமா என்று ஒரு பெண் அலற... நீதி வழங்க ஒரு படையே சென்றது.. தஜ்லா நதிக்கரையில் மான் செத்தாலும் நீதி சாகாது என்ற ஆட்சியாளர்கள்.

தூனிஷியா இளைஞன் நீதி தேடினான்.. அரபு வசந்தம் ஏற்பட்டது..
துருக்கிய சாம்ராஜ்யம் நீதிக்காக தடுமாறியது... அர்துகான் நிலை நாட்டினார்.

நீதி தக்வாவுடன் சேர்ந்தே இருக்கிறது... 
சமூகம் நீதியைத் தேடும் காலமெல்லாம் தக்வாவையும் சேர்த்தே தேடும்...

உறுதிகொள்... குர்ஆனிய சமூகம் நீதியை மிக நெருக்கமாக கண்டு கொள்ளும்..

கவலை கொள்ளாதே தீர்ப்பு நாளின் அதிபதி எமது ரப்பே... அல்ஹம்துலில்லாஹ்

அபு ஸஈத் ரய்யான்

1 comment:

  1. Unequivocally truth brother Raiyaan... yes, the almighty Allah will be the judge in the day of judgement and it's suffice for us. He'll offer the due punishment to all these culprits.

    ReplyDelete

Powered by Blogger.