Header Ads



புலமைப்பரிசில் என்ற "மாபியா"


எனது மகன் கடும் காய்சலிலும்
"டீச்சர் எனக்கு அடிக்க வேண்டாம்"
"டீச்சர் எனக்கு அடிக்க வேண்டாம்"
என்று தான் உலறினார்

எமது உறவினர் ஒருவரை கடந்த வாரம் சந்தித்த போது அந்த தாய் எங்களிடம் சொல்லியது அவரின் மகன் 5 ஆம் ஆண்டு படிக்கிறான். பாடசாலையில் ஏதாவது பிழைவிட்டால் ஒரு பிழைக்கு பல அடிகள். என் மகன் அடிவாங்கியதற்கு பரவாயில்லை எனது மகன் இப்பொழுது நூறை விட அதிகமாக புள்ளிகள் பெறுகிறான் என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் அந்த தாய்.

இந்த புலமைப்பரிசில் என்ற மாபியாவுக்கு பெற்றோர்கள் எந்தளவுக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்பதனை நினைக்கும் போது, பெரும் அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருக்கிறது.

இப்படியான ஒரு நரக மனநிலையில் வளரும் மாணவர் சமூகத்தின்
எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதனை நினைத்துப் பார்க்கவே
படுபயங்கரமாக இருக்கிறது.
எனது மகனின் மூளை நல்ல Storage ஆக இருந்தால் போதும் என்று நினைக்கின்றனர் எமது பெற்றோர்கள்
புதிய விடயங்களை உற்பத்தி செய்யும் மூளை நல்ல Factory ஆக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை
இன்றைய கல்வித்திட்டம் மூளை Sotrage களை மட்டுமே உருவாக்குகிறது
மூளை Factoryகளை அல்ல
நாடடின் அபிவிருத்திக்கு தேவை storege களை விட 
புதிய விடயங்களை கண்டுபிடிக்கும் உருவாக்கும் factoryகள்தான்
இப்படியே போனால்
நாடு முழுதும்
பூசனம் பிடித்த
டிகிரிகளும் 
PHDக்களும் பெருகியிருப்பார்கள்
ஆனால் நாடுமட்டும் அப்படியே இருக்கும்

-ARM INAS-

3 comments:

  1. Yes absolutely correct literacy and education are two different perspectives.
    If the purpose of education is "behavioral change", sri lankans are literate not educated.

    ReplyDelete
  2. Well said. It is the educated, mostly from leading schools who have ruined the country.

    ReplyDelete
  3. Absolutely - This exam is another good business for the tutors and teachers. We can see some school principals ask the parents of grade 5 students to buy some valuable gifts to their grade 5 class teachers. This is happening in our Muslim schools. This is absolutely unacceptable and unnecessary.

    ReplyDelete

Powered by Blogger.