August 24, 2016

எங்கள் உடம்பில் ஓடிக்­கொண்­டி­ருப்­பது, சிங்­கள இரத்­தமே - மௌலவி கலீல்

(ஏ.எல்.எம்.சத்தார்)

பௌத்த தாய்மார் ஊட்­டிய பால் குடித்தே நாம் வளர்ந்தோம். எங்­களை அர­வ­ணைத்து போஷித்­த­வர்­களும் பௌத்த தாய்­மாரே. எங்­க­ளது உட­லிலே ஓடிக் கொண்­டி­ருப்­பது சிங்கள இரத்­தம்தான். இது எங்­க­ளது தாய் நாடு. எங்கள் தாய் மொழி சிங்­களம். என்று தேச­மான்ய கலீல் மௌலவி கூறினார். 

அர­நா­யக்க எல­கி­பிட்­டிய மண்­ச­ரிவில் மர­ண­மான 128 பேர்­க­ளது மூன்று மாத நினை­வாக இடம்­பெற்ற வைப­வத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

வியன் எலிய  ரத­ன­யோதி விகா­ரா­தி­பதி தெபத்­கம சோம­ர­தர திஸ்ஸ தேரர் தலை­மையில் மேற்­படி விகா­ரையில் இடம்­பெற்ற அன்­ன­தான வைப­வத்தில் மௌலவி கலீல் மேலும் கூறி­ய­தா­வது;

முழு நாடுமே இந்த மண்­ச­ரிவு அழிவைக் கண்டு பெரும் சோகத்தில் மூழ்­கிய நாள். இதனை நினைவு கூரு­வ­தற்­கான சமயச் சடங்­கு­களில் கலந்­து­கொள்ள மதிப்­பிற்­கு­ரிய தேரர் என்­னையும் அழைத்­தி­ருந்தார். இன ஐக்­கி­யத்தின் அரு­மை­யான சூழ்­நி­லை கண்டு மகிழ்­கிறேன். 

நாம் பௌத்த மக்­க­ளுடன் மிகவும் நீண்ட கால­மாக பரஸ்­பரம் அன்­புடன் வாழ்ந்து வரு­கிறோம். ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு மேலாக சகோ­தர வாஞ்­சை­யுடன் இந்த நாட்­டிலே வசித்து வரு­கிறோம்.பௌத்த மக்கள் எம்மை ‘தம்பி’ என்று விளிக்­கின்­றனர். இது மோச­மான வார்த்தைப் பிர­யோ­க­மல்ல கூடாத வார்த்­தை­யு­மல்ல. 

எமது நாட்டு முஸ்­லிம்­களின் ஆரம்ப வர­லாற்றை சீர்தூக்கிப் பார்க்­கையில் தொன்று தொட்டு அரா­பி­யர்கள் ஏலம், கராம்பு போன்ற வாசனை திர­வி­யங்­களை இங்­கி­ருந்து கொள்­முதல் செய்­யவும் வைத்­தி­யத்­துறை பணி­களில் ஈடு­ப­டவும் இங்கு வந்து போயி­ருக்­கி­றார்கள். 

இவ்­வாறு வந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே இங்­குள்ள பௌத்த மக­ளிர்­க­ளினால் இவர்­களின் பண்­புகளால் கவ­ரப்­பட்டு பௌத்த பெண்­களை மணந்து தொடர்ந்தும் தம் வியா­பார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள்.

அந்த வழித்­தோன்­றல்கள் மூலம் உரு­வா­ன­வர்­கள்தான் இலங்கை முஸ்லிம் பரம்­ப­ரை­யினர். எனவே பௌத்த பெண்­ம­ணி­களே எமது தாய்மார் இது எமது தாய்­நாடு.

எங்கள் பகுதி விகா­ரை­யி­லுள்ள பிக்­கு­மார்கள் ‘மொஹமட் கொல்லோ’ முஹம்மத் பையனே இங்கே வாரும்… என்றே அன்­புடன் என்னை அழைத்த சம்­பவம் இன்னும் நினை­வி­ருக்­கி­றது.

இங்கு வாரும் தம்பி என்று ஆத­ர­வுடன் விளித்த சந்­தர்ப்­பங்­களும் உள்­ளன.

நான் சிங்­கள மொழி பாட­சா­லையில் கற்று புத்­த­ம­தத்தை ஒரு பாட­மா­கவும் எடுத்து பரீட்­சையும் எழு­தி­யி­ருக்­கிறேன். அப்­போ­தைய சந்­தர்ப்­பங்­களில் எங்கள் பிக்கு அன்­ன­தானம் வாங்கி புசித்து விட்டு மிகு­தியை எனக்கும் சாப்­பிடக் கொடுத்து, பாத்­தி­ரங்­களைக் கழுவி வைக்­கும்­ப­டியும் கூறுவார். நானும் அவர் சொன்­ன­படி செய்து முடிப்பேன்.

விகா­ரா­தி­ப­தியும் கூட எதற்கும் என்­னையே கூப்­பி­டுவார். அன்பு, கரு­ணை­யு­டனே நடந்து கொள்வார். நாமும் அப்­ப­டித்தான் இருப்போம். உனக்கு எனக்கு என்று பிரித்து சண்­டை­யிடும் செயற்­பாடு இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் இல்லை.

நாம் வெவ்­வேறு மதங்­களைப் பின்­பற்­று­கி­ற­போதும் தேசிய ரீதி­யாக நாம் அனை­வரும் சிங்­க­ள­வர்­களே, சிங்­கள நாட்டில் பிறந்த சிங்­கள கோத்­தி­ரத்­தி­னரே! இந்த எண்­ணப்­பா­டுதான் இளம், வாலிப உள்­ளங்கள் அனைத்­திலும் புகுத்­தப்­பட வேண்­டி­ய­தாகும்.

நாம் எப்­போதும் இந்த நாட்டு ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் ஒன்­றி­ணைந்தே வாழ்ந்து வந்­தி­ருக்­கிறோம். முட்­டி­மோதிக் கொண்ட சரித்­தி­ரமே இல்லை. சகோ­த­ரர்­களே எமக்கு பௌத்த மக்கள் மீது எத்­த­கைய சந்­தே­கப்­பார்­வை­யு­மில்லை. பௌத்த மக்கள் துன்ப துய­ரங்கள் இன்றி, நோய், நொடிகள் இல்­லாமல் சுக வாழ்வு வாழ வேண்டும் என்றே அதி­கா­லையில் எழும்பும் மக்கள் நாம். பெரும்­பான்மை மக்­க­ளுக்கு தொல்லை தொந்­த­ர­வுகள் கொடுப்­பார்­களா இந்த மக்கள்?

பௌத்த மக்கள் மீது எமக்கு அலா­தி­யான நம்­பிக்கை உண்டு. அதே­போன்று எமது பிக்­கு­மார்கள் எமக்கு ஏதும் இன்­னல்கள் வராது எம்மைப் பாது­காப்­பார்கள் என்ற நம்­பிக்­கையும் எமக்­கி­ருக்­கி­றது. அதனால் இந்த பரஸ்­பர அன்பு, ஒற்­றுமை பய­ணத்தைத் தொடர்வோம்.

இந்த பௌத்த நாட்டில் நாம் பிறந்­ததை நினைத்து பெரு­மை­ய­டை­கிறோம். இங்கு பிறந்­தமை நாம் பெற்ற பெரும் பாக்­கி­யமே! 

ஏனெனில் எம்மைச் சூழ அன்பு, பண்பு, கருணை என்ற அருங்­கு­ணங்கள் நிறைந்து காணப்­ப­டு­கின்­றன. இவற்றால் நாம் அர­வ­ணைக்­கப்­படும் போது ஆயுதம் ஏந்­தவா எண்ணம் வரும்? மகிழ்ச்சி அனு­தா­பங்­க­ளுடன் எம்மை நோக்கும் பௌத்­தர்­களும் எமக்­கெ­தி­ராக ஆயுதம் ஏந்­து­வார்­களா?

ஆயுதம் ஏந்­தவும் மாட்டோம் அவ்­வாறு எண்­ணவும் மாட்டோம். ஆயுதம் ஏந்­து­வ­தற்கும் இட­ம­ளிக்க மாட்டோம். இந்த நாட்­டிலே ஆயுதம் ஏந்தி எமக்குப் பெற்­றுக்­கொள்ள எதுவும் இல்லை.

நாம் இந்த நாட்­டிலே எல்லாம் பெற்று அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கிறோம். அதனால் எங்­க­ளுக்­கி­டையே உரு­வா­கி­யி­ருக்கும் சகோ­த­ரத்­துவப் பண்பை மேலும் நீடித்து வளர்த்துக் கொள்­வ­தற்கு பிரார்த்­திக்­கிறேன். எங்கள் தேரரே உங்­களைப் போன்ற மிகவும் சிறந்த பௌத்த தலை­வர்கள் இந்­நாட்­டிலே உரு­வாகி நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் பிரார்த்­திப்­ப­தோடு நாம் சிரம் தாழ்த்தி மனி­தர்­களை ஆசிர்­வ­திப்­ப­தில்லை. அது எமது மார்க்­கத்தில் தடை அவ்­வாறு செய்­யா­விட்­டாலும் எமது உள்ளத்தால் அதைவிடவும் கூடிய பணிவு, கௌரவம் உங்களுக்குச் செய்கிறேன் என்றார்.

இவ் வைபவத்தில் அமைச்சர் நவீன் திஸாநாக்க, முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க, ஐ.தே.கட்சியின் அரநாயக்க அமைப்பாளர் சட்டத்தரணி நிமல் ஜயசிங்ஹ, கேகாலை மாவட்டச் செயலாளர் அபே விக்கிரம வனசூரிய, அரநாயக்க பிரதேச செயலாளர் ஏ.எம்.பைஸல், உட்பட மண்சரிவு அனர்த்தத்தில் பலியானவர்களது உறவினர்கள் அடங்கிய பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

19 கருத்துரைகள்:

Blood is just blood- There is no such thing as Singhala blood, Hindhu blood or Muslim blood. You can talk only for yourself not for the whole community. No all Muslims speak Singhalese, nor did they drink milk from Singhala ladies. Inter racial relationship is important, however, your talk is way too much.

I think this guy is tring to fill the gap of Niyas Mawlavi. If our mothers are Sinhalese, how come our mother tongue becomes Tamil?

"கெஞ்சினால் மிஞ்சுவர் மிஞ்சினால் கெஞ்சுவர்"

அணாலும், இந்த ஐஸ் கொஞ்சம் ஓவர்,பாவம், மொட்டந்தலை பிக்குகளுக்கு ஜலதோஷம் வரப்போகிறது.

Our Maulavi's are " Gobbasena"s , எப்பொழுதும் முட்டால்தனமாக தான் மேடையில் பேசுவார்கள். என்ன செய்ய சிறுவயதில் இருந்து மதரஸாவில் அடைபட்டு உலகம் , பலக்கவழக்கம் , அடுத்தவுனிடம் சிறு இலாபத்துக்காக தலைகுனிவது இதெல்லாம் பழகிப்போந்விட்டது.

இவர்கள் இவ்வாறு எதற்காக தாளம் போடுவது முதலாவது மூன்று மாத ஞாபகார்த நாள் என்பதுஇஸ்லாத்தில் இல்லை அதில் கலந்துகொண்டு இவ்வாறு இஸ்லாத்தை வழைப்பதுஎதற்காக இவர் நியாஸ் மௌலவியின் REPLACE இருக்கும் போல் தோன்றுகிறது பள்ளிக்குள் போனால் ஒருவகை பயான் பொது கூட்டத்தில் நாலு பெரும் பதவி உள்ளவர்கள் வந்தால் அதற்கு ஏற்றாப்போல் நெழிந்து கொடுத்து எதுவல்லாம் இஸ்லாமிய அடிப்படையில் வேறுபடுமோ அதையும் கவனிக்காமல் முழங்குவது கேட்டால் நாங்கள் மூத்த உலமாக்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வார்கள் இவர்கள் எந்த வயதாக இருந்தாலும் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்

Yes, well said bro m.y. Shihabdeen

Be honest I highly appreciate this Gentleman for his great speech which is more suitable in this time. and very good points he mentioned there.

Time wasting comments people

இவர் கலீல் மௌலவியாம் இவர் நமது உடம்பில் சிங்கள ரத்தம் ஓடுவதாகவும் நாம் எல்லாம் சிங்களவர்கள்தான் என்று கூறுவது சரியா ? இந்த மௌலவி யார் எங்குள்ளவர் என்று தெரிந்தவர்கள் சொல்லவும் அவரின் தொலைபேசி இலக்கம் தெரிந்தால் இங்கே பதிவிடவும்

HOW WE CAN CALL HIM AS MOWLAVI HE DOES NOT KNOW BASIC ISLAM
MAY BE HIS FATHER SINHALISH

exactly Shihabdeen. he is trying to fill the gap of Niyas.( Dont mentioned moulavi.) his way of talking is very strange. i think just he used the politics infront of them. some words are he used it was disgusting.

எல்லா மதகுருமார்களும் மக்களை மாக்கானகள் ஆக்கும் எச்சைப்பொறுக்கிகள் தான் என்று தந்திரமாக சொல்கிறா

"மக்களுக்கு மத்தியில் எதையாவது சொல்லி ஒற்றுமைப்படுத்தி வையுங்கள்....உங்களுக்கு மத்தியில் கருத்து முரண்பட்டு பிரிந்துவிடாதீர்கள்."
இந்த நபி மொழியை உயிர்ப்பிக்கின்றவர்கள்தான் இந்த நாட்டுக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு என்ன அநியாயம் செய்தாலும் அவர்கள் உடமைகள், உயிர்கள் பறிபோனாலும் அதைப்பற்றி உங்களுக்கு கவலையே இல்லை ...அவர்களை திருப்தி படுத்த இப்படியெல்லாம் நீங்களே பொய் சொல்லலாமா? இப்போ எவ்வளவோ இழந்து விட்டோம் - இழந்து வருகிறோம் - வியாபாரம் முதல் - எமது ஹலால் சான்றிதழ் உரிமைகள் கூட பறிக்கப்பட்டு விட்டது ..இன்று பல இடங்களில் முஸ்லிம்களின் வியாபாரத்தை குறி வைத்து பகிரங்கமாகவே ஒரு பனிப்போர் நடந்து வருகிறது ..இந்த நிலையில் நீங்களெல்லாம் இப்படி பேசி பேசியே உங்கட நாமத்தை பதிவு செய்வதால் முஸ்லீம் சமூகத்துக்கு எந்த நியாயமும் கிடைக்க போவதில்லை அந்த அரசாங்கமும் அப்படிதான் இவர்களும் இப்படித்தான் ...இவர்கள் முஸ்லீம்களுக்கு நல்லது செய்பவர்களாக இருந்திருந்தால் பேருவளை கலவரத்துக்கு முழு பொறுப்பானவர்களை இன்று சிறையில் அடைந்திருக்க வேண்டும் ...ஆனால் அவர்கள் இன்னும் வெளியில் இருந்து பகிரங்கமாக முஸ்லிம்களை எதிர்த்து கொண்டுதான் இருக்கின்றார்கள். உங்களுக்கு வேண்டுமானால் சிங்கள இரத்தம் உடம்பில் ஓடுதாக இருக்கலாம் ஆனால் 100 கு 99 சதம் முஸ்லிம்களுக்கு முஸ்லீம் இரத்தம் தான் ஓடுது ..அதுவும் மனித ரத்தம்தான் ஓடுது ..வீதியில் இறங்கி எமக்கு நடக்கும் அநியாயத்துக்கு எதிராக சமாதான யாத்திரை சரி போக வருவீர்களா? சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தும் துணிவு கூட உங்களுக்கெல்லாம் இருக்கா? எங்கோ உள்ள தீவிரவாதிகளுக்கு இந்த இனவாதிகள் பயந்து தான் இலங்கையில் அவர்கள் இருக்கின்றார்கள் என்று எமது சமூகத்தின் மேல் பொய்யான ஒரு பரப்புரையை திணிக்க பார்க்கிறார்கள் இதெயெல்லாம் எதிர்த்து பேச உங்களுக்கெல்லாம் வக்கில்லையே ??

Mowlavis know what to speak and no need to teach them. They speak on behalf of us and we respect them as Muslims. Some pundits always critisize them and they do not leave even those who are in Kabr. May Allah protect us from these pundits

Haha கப்று வாசனை வருது. உண்டியல் பக்கத்தில் தானா?

Mr Nizar, are you born for sinhala umma and vaapa ? can you accept this ? if you accept this word you can agree what moulavi said Muslim should respest our Ulamas Not for "apple Polish" Moulavies ( Find the Idiom what is Apple Polish) don't say all are pundit we have the rights to post our opinion - ok dont debate more then this its not good for our brotherhood if anything mistake please forgive us on behalf of Allah.

some fools are same background the cowards never help for the society they afraid and praise worldly benefits never obey word of lord these culprits shame for the total communities the ill equipped jamath over powered entire masjids and madresas and they taking the fate of all muslims into deep tradgedy their fake islam never help to solve our problems.

Post a Comment