Header Ads



மஹிந்த வெளியிட்டுள்ள அறிக்கை

பிரபலமான அமைப்பாளர்களை நீக்கியதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் பொறுப்பை இறுதியில் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டி வரும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரபலமான அமைப்பாளர்கள் சிலரை நீக்கி புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,. 

பவித்ரா வன்னியாராச்சி, கெஹலிய ரம்புக்வெல்ல, சீ.பி.ரத்நாயக்க, காமினி லொகுகே, ரோஹித அபேகுணவர்த்தன, மஹிந்த யாபா அபேவர்த்தன உள்ளிட்டவர்கள் அமைப்பாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் 

இது கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை பழிவாங்கும் புதிய முறை என்று கூறப்பட்டுள்ளது. 

நாங்கள் இப்போது காண்பது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இல்லாதொழிக்கும் படிமுறையின் இரண்டாவது கட்டத்தை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதன் முதலாவது கட்டம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் நிர்வகிக்கப்பட்டு வந்த அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்பட்டமை என்று மஹிந்த ராஜபக்ஷ அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

இவ்வாறு உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு தெளிவான நன்மைகள் கிடைத்திருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.