August 08, 2016

"எமது கால்கள் ஒரு ஜமா­அத்தில் இருக்­கலாம், நமது கண்­கள் சமூ­கத்தின் மீது இருக்க வேண்டும்" அகார் முஹம்மத்

- தொகுப்பு:மொஹமட் ரிபாக் -

புத்­தளம் தில்­லை­யடி முஹா­ஜிரீன் அரபுக் கல்­லூ­ரியின் முப்­பெரும் விழா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கல்­லூரி வளா­கத்தில் இடம்­பெற்­றது. இதில் விஷேட பேச்­சா­ள­ராகக் கலந்­து­கொண்ட பேரு­வளை ஜாமியா நளீ­மிய்யா கலா­பீ­டத்தின் பிரதிப் பணிப்­ப­ளாரும், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் உதவித் தலை­வ­ரு­மான ஏ.சி.அகார் முஹம்மத் (நளிமீ) ஆற்­றிய விஷேட உரையின்தொகுப்பு.

இந்த நாட்டில் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தில் மேம்­பாட்டை கவ­னத்தில் கொண்டு பல்­வேறு காத்­தி­ர­மான முன்­னெ­டுப்­புக்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற ஒரு கால­மாக இதனை அடை­யா­ளப்­ப­டுத்­தினால் மிகை­யாக இருக்­க­மாட்­டாது. ஒப்­பீட்டு ரீதியில் இந்த சமூ­கத்தின் மேம்­பாட்­டுக்­காக உழைத்­த­வர்கள் சமூ­கத்தின் கல்விக் கண்­களை திறந்து விடு­வ­தற்­காக தமது கவ­னத்தை குவிப்­பது எல்லா வகை­யிலும் பய­னுள்­ள­தாக, பிர­யோ­ச­ன­முள்­ள­தாக விளை­திறன், வினைத்­திறன் மிக்­க­தாக அமையும். சமூ­கத்­து­டை­ய பொரு­ளா­தார நிலை, சுகா­தார நிலை, ஆன்­மீக, தார்­மீக ஒழுக்­கப்­பண்­பாட்டு நிலை மற்றும் கல்வி நிலை என்­பன ஒரு சமூ­கத்தின் மேம்­பாட்டை தீர்­மா­னிக்­கின்ற கார­ணி­க­ளாகும்.

ஒப்­பீட்டு ரீதியில் ஒரு சமூ­கத்தின் மேம்­பாட்டை திர்­மா­னிக்­கின்ற மிக முக்­கி­ய­மான கார­ணி­யாக கல்­வியை நாங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தினால் அது மிகை­யா­காது. ஒரு சமூ­கத்தின் கல்வி நிலை சீரா­கி­விட்டால் அந்த சமூ­கத்தின் பொரு­ளா­தார நிலை சீரா­கி­விடும். சுகா­தாரம் ஆரோக்­கிய நிலைக்கு வரும். அந்த சமூ­கத்­து­டைய ஆன்­மீக, தார்­மீக, பண்­பாட்டு ஒழுக்க நிலை­கூட சீர­டையும். இதைத்தான் மிகப்­பெ­ரிய யாதார்த்­தமும் உண்­மை­யு­மாகும்.

அர­சியல் தலை­வ­ராக இருக்­கலாம். சமூகத் தலை­மை­களாக இருக்­கலாம். அகில இலங்கை ஜம்­மி­யதுல் உல­மா­வாக இருக்­கலாம். சிவில் அமைப்­பு­க­ளாக இருக்­கலாம், சமூக சேவை நிறு­வ­னங்­க­ளாக இருக்­கலாம். தற்­கா­லி­க­மாக குறுங்­கா­லத்­திட்டம் என்ற வகையில் சமூ­கத்­து­டைய பொரு­ளா­தாரம், சுகா­தாரம் சார்ந்த திட்­டங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்­தாலும், இந்த சமூ­கத்தில் நிலை­யான மாற்­றத்தைக் காண விரும்­பினால் எமது முழு­மை­யான கவனம் கல்­வியின் பக்கம் இருக்க வேண்டும்.

அது பாட­சாலைக் கல்­வி­யா­கவோ, பல்­க­லைக்­க­ழகக் கல்­வி­யா­கவும், ஷரீ­ஆ­துறை சார்ந்த கல்­வி­யா­கவும் இருக்­கலாம். கல்­வியை நாம் பிரித்துப் பார்க்­க­வில்லை. அனைத்து துறை­சார்ந்­த­வர்­களும் எமது சமூ­கத்­திற்கு தேவைப்­ப­டு­கி­றார்கள். நமது சமூ­கத்­திற்கு புத்­தி­ஜீ­விகள், துறை­சார்ந்த நிபு­ணர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் உட்­பட அனை­வ­ரையும் வழி­ந­டத்­து­கின்ற ஷரீ­ஆத்­துறை உல­மாக்கள் அதி­க­மாகத் தேவைப்­ப­டு­கி­றார்கள்.

அல்­ஹம்­துலில்லாஹ். இந்த நாட்­டிலே 250 இற்கும் அதி­க­மான மத­ர­ஸாக்கள் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றன. 125 ஆண்­டு­க­ளுக்கு மேலாக இந்த நாட்­டிலே அரபுக் கலா­சா­லைகள் நாட்­டுக்குத் தேவை­யான இமாம்­களை, கதீப்­மார்­களை, உல­மாக்­களை, உஸ்­தாத்­மார்­களை மாத்­திரம் அல்ல பெரும் புத்­தி­ஜீ­வி­களை, சிந்­த­னை­யா­ளர்­களை, எழுத்­தாளர்­களை, மேதை­களை, சிறந்த பேச்­சா­ளர்­களை, உரு­வாக்கி வந்­தி­ருக்­கின்­றன என்­பது மிகப் பெரும் உண்­மை­யாகும்.

அந்த வகையில் சவால்­களைப் பொறுத்து, நாம் எதிர்­நோக்­கு­கின்ற அச்­சு­றுத்­தல்­களைப் பொறுத்து, பிரச்­சி­னை­களைப் பொறுத்து எமது முன்­னு­ரி­மைகள், அணு­கு­மு­றைகள் மாற வேண்டும். இலங்­கையில் ஒரு கால­கட்­டத்தில் மௌல­வி­மார்கள், உல­மாக்கள் போதும் என்ற நிலை காணப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இப்­போது அந்த நிலை மாறி­யி­ருக்­கி­றது. உலக நிலைமை மாறி­யி­ருக்­கி­றது. எமது நாட்டின் நிலை­மையும் மாறி­யி­ருக்­கி­றது. வித்­தி­யா­ச­மான உலகில் நாம் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கிறோம். 

எனவே, இந்தக் காலத்­தி­லுள்ள சவால்­க­ளுக்கும், பிரச்­சி­னை­க­ளுக்கும் வெற்­றி­க­ர­மாக முகம்­கொ­டுக்கக் கூடிய ஆற்­றலை உரு­வாக்கக் கூடிய கடப்­பாடு நம் எல்­லோ­ருக்கும் இருக்­கி­றது. அந்த வகையில் எமது அரபுக் கலா­சா­லைகள் Update செய்­யப்­பட வேண்டும். Upgreat செய்­யப்­பட வேண்டும். எமது அரபுக் கலா­சா­லையின் பாடத்­திட்டம், பாடப்­புத்­தகம், நிர்­வாகக் கட்­ட­மைப்பு, முகா­மைத்­துவம் என்­ப­வற்றில் காலத்­திற்கு ஏற்ப மாற்றம் செய்­யப்­பட வேண்டும். இவை­ய­னைத்தும் செய்­யப்­ப­ட­வில்லை என்றால் நாம் ஏமாற்றம் அடைந்து விடுவோம். 

இந்தியாவில் தமிழ் நாட்டில் பல ஆண்டு காலம் பழை­மை­வாய்ந்த மத­ர­சாக்கள் மூடு­விழா கண்டு வரு­கின்­றன. காரணம் அரபுக் கலா­சா­லையில் கல்வி கற்­ப­தற்கு மாண­வர்கள் வரு­கி­றார்கள் இல்லை என்ற ஒரு குற்­றச்­சாட்டு காணப்­ப­டு­கி­றது.  ஆனால், எமது இலங்­கை­யி­லுள்ள மத­ர­சாக்கள் அவ்­வாறு இல்லை. எமது நாட்­டி­லுள்ள அரபு மத­ர­சாவில் காத்­தி­ர­மான, புரட்­சி­க­ர­மான மாற்­றங்கள் காணப்­ப­டு­கின்­றன. இநத நாட்­டி­லுள்ள அரபு மத­ர­சாக்­களின் சான்­றி­தழ்­க­ளுக்கு ஒரு அங்­கீ­காரம் வழங்க வேண்டும் என்­ப­தற்­காக தற்­போது இரண்டு பாடத்­திட்­டங்­களை பரீட்சைத் திணைக்­க­ளத்­திற்கு ஊடாக அங்­கீ­காரம் பெற்று பரீட்சைத் திணைக்­க­ளமே பரீட்­சை­க­ளையும் நடத்தி வரு­கி­றது.

அடுத்த கட்­ட­மாக பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தேவை­யான ஒரு பாடத்­திட்­டத்தை நாம் உரு­வாக்­கி­யி­ருக்­கிறோம். அது­பற்றி தற்­போது கலந்­து­ரை­யாடிக் கொண்­டி­ருக்­கிறோம். இன்ஷா அல்லாஹ் எமது அந்த செயற்­திட்டம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டால் அரபுக் கலா­சா­லை­களில் கல்வி பயி­லு­கின்ற உயர் வகுப்பு மாண­வர்கள் அர­சாங்­கத்­திற்கு ஊடாக பட்டச் சான்­றி­தழ்­களைப் பெற்­றுக்­கொள்­கின்ற வாய்ப்­புக்­களை பெறு­வார்கள்.

இவை­ய­னைத்தும் இந்த நாட்டில் காணு­கின்ற நல்ல மாற்­றங்­க­ளாகும். தற்­போது எமது நாட்டு அரபு மத­ர­சாக்­களில் வெவ்வேறு பாடத்­திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இதனால் குறித்த மத­ர­சாக்­களில் கல்வி கற்று பட்­டச்­சான்­றி­தழ்­களைப் பெற்று உல­மாக்கள் வெளி­நாடு செல்­கின்ற போது இலங்கை அர­புக்­கல்­லூ­ரி­யினால் வழங்­கப்­பட்ட சான்­றி­த­ழுக்கு அவ்­வ­ளவு வர­வேற்பு கிடை­யாது. சில இடங்­களில் அந்த சான்­றி­தழை சாதா­ரண தரத்­திலும், இன்னும் சில இடங்­களில் உயர் ­த­ரத்­திலும் கணக்­கெ­டுக்­கி­றார்கள்.

எனவே, இவை அனைத்தும் ஒழுங்­கு­ப­டுத்­தப்­படல் வேண்டும். ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பாடத்­திட்டம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். இன்று இலங்கை முஸ்­லிம்­களின் கல்வி பற்றி எல்­லோரும் ஒரே மாதி­ரி­யாக சிந்­திக்­கின்ற நிலை காணப்­ப­டு­கி­றது. இது அல்­லாஹ்வின் மிகப்­பெரும் அரு­ளாகும்.

இந்த நாட்­டி­லுள்ள 800 இற்கும் மேற்­பட்ட முஸ்லிம் பாட­சா­லை­களா­க இருக்­கலாம். 250 இற்கு மேற்­பட்ட அரபு கலா­சா­லை­க­ளாக இருக்­கலாம். 500 இற்கு மேற்­பட்ட அஹ­திய்­யா­க்க­ளா­க இருக்­கலாம், மக்தப் அமைப்­பு­க­ளா­கவும் இருக்­கலாம், நிறு­வ­னங்­க­ளாக இருக்­கலாம் அனைத்து நிறு­வ­னங்­க­ளுக்கு ஊடா­கவும் தர­மான, பண்­பட்ட, பக்­கு­வ­ப்பட்ட, படித்த ஒரு சமூ­கத்தை உரு­வாக்கும் பொருட்டு எமது அனை­வ­ரி­னதும் சிந்­தனை குவிக்­கப்­படல் வேண்டும்.

இந்­தக் ­கா­லத்து சவால்­க­ளுக்கு நாங்கள் எப்­படி முகம் கொடுப்­பது என்­ப­துதான் மிகப்­பெரும் சவா­லாகும். ஒவ்­வொரு காலத்­திலும் வாழ்ந்த அறி­ஞர்கள், உல­மாக்கள், சமூகத் தலை­மைகள், அந்­தக்­கா­லத்து சவால்­க­ளுக்கு வெற்­றி­க­ர­மாக முகம்­கொ­டுத்­தார்கள். அத­னையே தெ ளிவா­க கரு­தி­னார்கள். அந்த வகையில் இந்தக் காலத்து அறி­ஞர்கள், உல­மாக்கள், சமூகத் தலை­மைகள், அரபுக் கலா­சா­லை­­களும், பல்­க­லைக்­க­ழ­கங்­களும் இந்­தக்­கா­லத்து சவால்கள் என்ன என்­ப­வற்றை முதலில் அடை­யாளங் காண வேண்டும். அவற்­றுக்கு முகம் கொடுக்கும் வகை­யில்தான் நாம் உல­மாக்­களை உரு­வாக்க வேண்டும்.

காலம் கடந்த விட­யங்­களை பேசிக்­கொண்­டி­ருப்­பதில் எவ்­வித பிர­யோ­ச­னமும் கிடை­யாது.  பாரம்­ப­ரிய முரண்­பா­டு­களை மூட்டை கட்­டி­விட்டு வேற்­று­மையில் ஒற்­றுமை கண்டு முரண்­பாட்டில் உடன்­பாடு கண்டு அனை­வரும் ஒன்­றாக இணைந்து செயற்­பட வேண்­டிய ஒரு காலத்­தில்தான் நாங்கள் இருக்­கிறோம். எமது கால்கள் ஒரு ஜமா­அத்தில், ஒரு அமைப்பில், ஒரு நிறு­வ­னத்தில் இருக்­கலாம். ஆனால் கண்­டிப்­பாக நம் அனை­வ­ரி­னதும் கண்­களும் சமூ­கத்தின் மீது இருக்க வேண்டும். 

2 கருத்துரைகள்:

what is important issues In Muslim community/ What are less important issues in Muslim community ? Iman, education , dawa, Economy or health or community relation,, politics , families .. jobs.. what are these important in SL for Muslim

I agree with this evaluation of Muslim community but do we much needed mechanism to produce such good leadership...all Arabic colleges have done little bit but today leaderships need more than traditional Mousavi can do..knowslge of modern sciencestyle and modern technology and modern economy and politis are much needed for any good leaderstuff..

Post a Comment