Header Ads



500 மாலுமிகளுடன் அமெரிக்க பாரிய போர்க்கப்பல், நாளை இலங்கை வருகிறது


அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ( ஏ.எஸ்-40)  நாளை -29- கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

வழக்கமான எரிபொருள் நிரப்பும் பயணமாகவே கொழும்புத் துறைமுக வருகை அமைந்திருப்பதாகவும், இதன்போது அமெரிக்க கடற்படை மாலுமிகள் தரையில் விடுமுறையைக் கழிக்கவுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரக அறிக்கை கூறுகிறது.

இந்தோ- பசுபிக் பிரதேசத்தில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கும், அமெரிக்கப் படைகளுக்கு உதவவும், நீர்மூழ்கி விநியோக, உதவிக் கப்பலான யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள், குவாம் தீவில் நிலை கொண்டிருக்கிறது.

இந்தக் கப்பலில் 500 மாலுமிகள் வரை பணியாற்றுகின்றனர்.

இந்த ஆண்டில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் மூன்றாவது அமெரிக்கப் போர்க்கப்பல் இதுவாகும்.

ஏற்கனவே யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், யுஎஸ்எஸ் நியூ ஓர்லியன் ஆகிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.