Header Ads



வாருங்கள், எம்முடன் சேர்ந்துகொள்ளுங்கள்!


வாருங்கள், சுதந்திரமான மற்றும்  சமாதானமான இலங்கைக்காக எம்முடன் ஒன்றுபடுங்கள்! ஆகஸ்ட் 15ம் திகதி 2016 அன்று மாலை பிற்பகல் 4.30  மணிக்கு பௌத்தாலோக மாவத்தையில்.

நாம் வெவ்வேறு பின்புலங்களிளிருந்தாலும் இலங்கையர்களாக ஒரு ஜனநாயக நாட்டிற்காக எமது நோக்கத்தால் ஒன்றுபட்டவர்கள். நாம் இங்கு அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்றுகூடுவது பல்லின, மத, கலாச்சார  மக்களுக்கும் சரிசமமான உரிமையை கட்டி எழுப்பும் சமூகத்தை உருவாக்கும் ஒரு பொறுப்புள்ள பிரஜை என்ற அடிப்படையிலே ஆகும். 

எமது நம்பிக்கை ஒரு பன்மைத்துவமான ஜனநாயக இலங்கையில் அனைவரும் சமமானவர்கள், அனைத்து பிரஜைக்கும் சம உரிமை உண்டு. இதனை அனைவருக்காகவும் உண்மைப்படுத்துவதற்கு எம்மால் முடியும், அது எமது கடமையும் கூட. 

இனங்களுக்கிடையில் இனவாதத்தையும் துவேஷத்தையும் தூண்டிவிடுவதை நாம் பகிரங்கமாக கண்டிப்பதோடு, அதற்குத் துணை நிற்கும் தனி மனித கூட்டு செயற்பாடுகளுக்கெதிராக நின்று பாதிப்புக்குலாக்கப்பட்டவர்களுக்காக துணை நிற்கிறோம் . 

எமது தேவை நாம் அனைவரும், அரசியல்வாதிகள், மார்க்க, கல்வி அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள், ஊடகங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சமரசத்துடன் மதிப்பளித்து வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கக்கூடியவர்களாக  பொறுப்பெடுக்க வேண்டும். 

நாம் அரசாங்கத்திடமும் விசேடமாக சட்டத்தை நிலை நாட்டக்கூடிய அதிகாரிகளிடமும் வேண்டிக்கொள்வது, வேற்றுமையில் ஒற்றுமையை ஊக்குவித்தல், இனங்களுக்கிடையில் வெறுப்பை தூண்டுபவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்தல் மற்றும் இதுபோன்ற செயற்பாடுகள் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்குரிய அனைத்து கண்டிப்பான நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும் என்பதாகும். 

நாம் கூடியிருப்பது 

- அனைத்து சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாம் ஒற்றுமைக்காகவும் சமவுரிமைக்காகவும் சமாதானத்திற்காகவும் ஒன்றுபட்டவர்கள் என்பதை வெளிப்படுத்த.

- மற்ற சமூகத்தினருக்கெதிராக பயமுறுத்துதல், வெறுப்புணர்வை தூண்டுதல், வன்முறை செயல்களில் ஈடுபடுதல் மற்றும் ஈடுபடுத்தல் போன்ற செயற்பாடுகளை  வன்மையாக கண்டிப்பதற்கு.

- அனைவருக்கிடையிலும் நட்பையும் நன்மதிப்பையும் கட்டியெழுப்பி அனைவருக்குமான ஒரு ஜனநாயக இலங்கையை கட்டியெழுப்ப....

உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், சாகாக்கள் அனைவருடனும் வருகை தந்து ஒரு சுதந்திரமான மற்றும்  சமாதானமான இலங்கையை உருவாக்குவதற்கான உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள். வாருங்கள் எம்முடன் சேர்ந்துகொள்ளுங்கள்!

1 comment:

  1. First thing first . Who is organizing this ? Introduce
    yourself to the public before extending the invitation.

    ReplyDelete

Powered by Blogger.