August 05, 2016

முஸ்லிம் பிர­தி­நி­தி­கள், ஜனா­தி­­ப­தி­ சந்­திப்­பு - கவலையும் தெரிவிப்பு

-SNM.Suhail-

முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் நேற்று -04- மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் விஷேட சந்­திப்­பொன்றை நடத்தி முஸ்­லிம்கள் சம­கா­லத்தில் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்பில் எடுத்­து­ரைத்­தனர்.  

நேற்று மாலை 4:30 இற்கு ஆரம்­ப­மான இச்­சந்­திப்பு 40 நிமி­டங்கள் வரை நீடித்­தது. 

முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அஸாத் சாலியின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற இந்த சந்­திப்பில், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், வை.எம்.எம்.ஏ., அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனம், ஜமா­அத்தே இஸ்­லாமி, மேமன் சங்கம் மற்றும் ஷபாப் அமைப்பு உள்­ளிட்ட சிவில் அமைப்­புகள் கலந்து கொண்­டன.

சந்­திப்பின் ஆரம்­பத்தில் உரை­யாற்­றிய  அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, முன்னர் கல்வி அமைச்­ச­ராக சுசில் பிரேம ஜயந்த இருந்த காலத்தில் இலங்கை முஸ்­லிம்­களின் கல்விப் பிரச்­சி­னைகள் குறித்­த­தான அறிக்­கை­யொன்றை தயா­ரித்து வழங்­கி­யி­ருந்தோம்.

அந்த அறிக்­கைக்கு என்ன நடந்­தது என்­பது பற்றி தற்­போது தெரி­யா­துள்­ளது. அந்த அறிக்­கையில் இலங்கை முஸ்­லிம்கள் கல்­வியில் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்த விப­ரங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் அதனை தீர்த்து வைப்­ப­தற்­கான பரிந்­து­ரை­க­ளையும் அதில் உள்­ள­டக்­கி­யி­ருக்­கிறோம்.

எனவே அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வழி­ச­மைக்­கு­மாறு வேண்டிக் கொண்டார். 

இங்கு கருத்து தெரி­வித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன், கொழும்பு முஸ்­லிம்­களின் கல்வி மட்டம் குறித்து தெளிவு­ப­டுத்­தி­னார். 

அத்­துடன் பாட­சா­லை­களின் கல்வித் தரம் குறைந்த மட்­டத்தில் காணப்­ப­டு­வ­தா­கவும் கொழும்பு 12 இல் அமைந்­துள்ள ஹமீத் அல் ஹுஸை­னிய்யா தேசிய பாட­சா­லையின் தற்­போ­தைய நிலை மற்றும் ஆசி­ரியர் பற்­றாக்­குறை பற்­றியும் எடுத்­து­ரைத்தார். 

இதன்­போது குறிக்­கிட்ட ஜனா­தி­பதி,  ஹமீத் அல் ஹுஸை­னியா பாட­சா­லையின் நிலை­மைகள் குறித்து தான் அறிந்­துள்­ள­தாக தெரி­வித்­த­தோடு கொழும்­பி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லைகள் குறித்து கவலை வெளி­யிட்டார். 

அத்­துடன் மேலும் கருத்து தெரி­வித்த முஸ்லிம் கவுன்சில் தலைவர், வடக்கு மாகாண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், அக்­க­ரைப்­பற்றில் சவூதி அர­சாங்­கத்­தினால் அமைத்­துக்­கொ­டுக்­கப்­பட்ட நுரைச்­சோலை சுனாமி வீட்­டுத்­திட்டம் குறித்தும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்தார். 

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி இங்கு கருத்து வெளி­யி­டு­கையில்,  கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தீவி­ர­மாக வெறுப்பு பிரச்­சா­ரங்கள் முன்­னெ­டுக்கப்­பட்­டன. தற்­போது அவை தணிந்­தி­ருந்­தாலும் மீண்டும் அவ்­வா­றான வெறுப்பு பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களை கடும்­போக்­கா­ளர்கள் ஆரம்­பித்­துள்­ளனர்.  

குறிப்­பாக சமூக ஊட­கங்­களின் வாயி­லாக இந்த வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் பேச்­சுக்கள் அதி­க­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இது கட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.  சிங்­கப்­பூ­ரி­லுள்ள வெறுப்புப் பேச்­சுக்கு எதி­ரான சடத்­தத்தை போன்­ற­தொரு சட்­ட­மொன்று எமது நாட்­டிலும் உரு­வாக்­கப்­படல் வேண்டும்.

அத்­துடன் நாட்டில் ஏற்­க­னவே இருக்­கின்ற இனங்­க­ளுக்கு எதி­ரான கருத்­து­களை தடை­செய்யும் சட்­டங்கள் அமுல்­ப­டுத்­தப்­பட்டால் வெறுப்புப் பிரச்­சா­ரத்தை குறைக்­கலாம் என்றார். 

முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் அஸாத் ­சாலி , தெஹி­வளை பாத்­தியா மாவத்தை பள்­ளி­வாசல், கிரேண்ட்பாஸ் பள்­ளி­வாசல், தம்­புள்ளை ஹைரிய்யா பள்­ளி­வாசல், கண்டி லைன் பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றின் பிரச்­சி­னை­களை நீங்கள் தலை­யிட்டு தீர்த்துத் தர வேண்டும் என ஜன­தி­ப­தி­யிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

தென்­மா­காண முஸ்­லிம்­க­ளுக்கு கல்வி ரீதியில் வளங்­களை பகிர்ந்­த­ளித்தல்,  ஆசி­ரியர் நிய­ம­னத்தில் பார­பட்சம் காட்­டுதல் உள்­ளிட்ட பல சவால்கள் குறித்த மகஜர் ஒன்றை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளன செய­லாளர் அஜ்­வதீன் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்தார். 

அத்­துடன், உலமா சபை உறுப்­பினர் முர்ஷித் முளப்பர், முஸ்லிம் கவுன்­ஸிலின் பிரதித் தலைவர் ஹல்மி அஹ­மட் ஆகி­யோரும் இங்கு கருத்­துக்­களை வெளி­யிட்­டனர். 

முஸ்­லிம்­களின் தொழில்­வாய்ப்­புகள், மௌலவி ஆசி­ரியர் நிய­மனம், ஆசி­ரியர் நிய­மனம் மற்றும் இட­மாற்றம் உள்­ளிட்ட பல விட­யங்­களும் இங்கு பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டன.

சக­ல­ரின் கருத்­து­க­ளையும் அவ­தா­ன­மாக செவி­ம­டுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கும் மேற்­ப­டி  பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். 

அத்துடன் தனது மேலதிக செயலாளர் இவ்விடயங்களில் நேரடியாக தலையிட்டு தீர்த்து வைப்பார் என்றும் ஜனா­தி­பதி இதன்­போது முஸ்லிம் சிவில் சமூ­க பிர­தி­நி­தி­க­ளிடம் உறுதி­ய­ளித்­­தமை குறிப்­பி­டத்­­தக்­க­து. விடிவெள்ளி

1 கருத்துரைகள்:

Muslim Civil society has at last awoken from its slumber in reality - ALHAMDULILLAH. "The Muslim Voice" which has been crying from the wilderness of the Muslim Political and Community arena has been calling for such action and denouncing the slumberness of our concerned citizens in all the comments "The Muslim Voice" has been making in this esteemed website/forum and other web media and Muslim web links. If our "KINDLING" has also contributed towards this action, then "ALHAMDULILLAH" we thank God AllMighty Allah for same, Insha Allah. Discussions can take place, and issues can be placed on the table for consideration with the government, but earlier experiences as highlighted by As Sheikh Rizvy Mufti - Head of the All Ceylon Jamiyyathul Ulema regarding a report handed over to former Minister of Education Hon. Susil Premjayantha in the Mahinda government being shelved aside, during the discussions with HE. Maithripala Sirisena should be considered a warning that such a think can happen with this verbal/oral discussion that took place with the President. It is administratively suggested, that the Muslim Civil Society groups/representatives/persons who attended this important discussion should make a written memorandum/document on the matters discussed with necessary annextures, if any available/required and submit a signed copyof this memorundum to the Additional Secretary to the President refered by the President so that matters are recorded in writing for further follow-up and reference, Insha Allah. It is further suggested that a “Link Corordinator follow-up personnel of the group” should be nominated as the “Link person” who will be in touch with the Presidential Secretariat and the President’s personal office in order to make sure that appropriate action is being taken by the officials as “ASSURED” by the President, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – "The Muslim Voice”.

Post a Comment