Header Ads



முஸ்­லிம்­ பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வுகிட்ட, இலங்கை அர­சுக்கு அழுத்­தம் பிர­யோ­கிக்­கமாட்டோம் - அல்­துர்க்கி

-விடிவெள்ளி ARA.Fareel-

இலங்­கையில் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக உலக முஸ்லிம் லீக்  இந்­நாட்டின் ஜனா­தி­ப­திக்கோ அர­சுக்கோ அழுத்­தங்­களைப்  பிர­யோ­கிக்­காது. ஆனால்  முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு வழங்­கு­வ­தற்­காக  எமது ஆலோ­ச­னை­களை வழங்க முடியும் என அவ்­வ­மைப்பின் செய­லாளர் நாயகம் கலா­நிதி அப்­துல்­லாபின் அல்­முஹ்ஸின் அல்­துர்க்கி தெரி­வித்தார். 

இதே­வேளை, இலங்கை முஸ்­லிம்கள் ஏனைய மதத்­த­வர்­க­ளுடன் முரண்­பட்டுக் கொள்­ளாது சமா­தா­ன­மாக  சக­வாழ்­வோடு வாழ­வேண்டும்.  இது எமது  கட­மை­யாகும். ஏனைய மதத்­த­வர்­க­ளுடன் ஒற்­று­மை­யாக வாழ வேண்­டு­மென்­பதே  இஸ்­லா­மிய கோட்­பா­டாகும்  என இன்று இலங்­கையில் ஆரம்­ப­மா­க­வுள்ள உலக முஸ்லிம் லீக்கின்  இருநாள் மாநாட்டில் கலந்­து­கொள்ள  இலங்கை வந்­துள்ள  உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் மேலும் தெரி­வித்தார். 

கொழும்பு மாளிகாவத்தையி­லுள்ள  இஸ்­லா­மிய நிலை­யத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின்  கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். தொடர்ந்தும் அவர் பதி­ல­ளிக்­கையில், 

இலங்­கையின் பல்­லின  சமூ­கங்­க­ளுக்­கி­டையில்  எது­வித  முரண்­பா­டு­களும்  உரு­வா­கக்­கூ­டாது என்­பதே உல­க­முஸ்லிம் லீக்கின்  எதிர்­பார்ப்­பாகும். உலக முஸ்லிம் லீக்  இலங்­கையின்  ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கி­றது. 

கேள்வி: இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்குப் பல  பிரச்­சி­னைகள் உள்­ளன.  சவால்கள்  உள்­ளன. முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக உலக முஸ்லிம் லீக் இலங்கை ஜனா­தி­ப­திக்கு  அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­குமா?

பதில் : உலக முஸ்லிம் லீக்­கினால் இந்­நாட்டின் ஜனா­தி­ப­திக்கோ அர­சுக்கோ  அழுத்­தங்­களைப்  பிர­யோ­கிக்க முடி­யாது. அழுத்­தங்கள் பிர­யோ­கிக்க  எமக்கு  அதி­கா­ர­மில்லை.ஆனால்  முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு வழங்­கு­வ­தற்­காக  எமது ஆலோ­ச­னை­களை வழங்க முடியும். நாம் எமது ஆலோ­ச­னை­களை வழங்­குவோம். 

கேள்வி: நடை­பெ­ற­வுள்ள உலக முஸ்லிம் லீக்கின்  மாநாட்டில் இலங்கை தொடர்பில்  என்ன திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளீர்கள்? 

பதில்:  நாம் அமுல்­ப­டுத்த வேண்­டிய  திட்­டங்கள் தொடர்பில் இரு நாடு­களும் சேர்ந்து தீர்­மானம் எடுப்போம்.இரு­நா­டு­களும்  சேர்ந்து  குழு­வொன்­றினை  நிய­மித்து  அக்­குழு என்ன திட்­டங்­களை  மேற்­கொள்­வது என்­பது பற்றி தீர்­மா­னங்­களை  மேற்­கொள்ளும். உலக முஸ்லிம் லீக் தேவை­யான  ஆலோ­ச­னை­களை வழங்கும். 

கேள்வி: இலங்­கைக்கு வழங்­கப்­படும்  ஹஜ் கோட்­டாவை அதி­க­ரித்துப் பெற்றுக் கொள்­வ­தற்கு  உலக  முஸ்லிம் லீக் உத­வி­பு­ரி­யுமா?

பதில்: ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கென சவூதி அரே­பி­யாவில் தனி­யான  ஓர் அமைச்சு  இருக்­கி­றது.  இந்த அமைச்சின்  பொறுப்­பிலே அனைத்துக் கட­மை­களும்  இயங்­கு­கின்­றன. அதனால் இவ்­வி­வ­கா­ரத்தில் எம்மால் தலை­யிட முடி­யாது. எம்மால் சிபார்­சு­களை மாத்­திரம் செய்­யலாம். ஹஜ் அமைச்சே தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளும். 

கேள்வி: இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யாக காதி நீதி­மன்­றங்கள் இயங்­கி­வ­ரு­கின்­றன. காதி நீதி­ப­தி­க­ளுக்கு ஷரீஆ தொடர்­பான பயிற்­சி­களை சவூ­தியில்  ஏற்­பாடு செய்ய முடி­யுமா?

பதில்: அதற்­கான  கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும். சவூதி  தூத­ரகம் ஊடாக அல்­லது இலங்­கை­யி­லுள்ள இஸ்­லா­மிய  நிலை­யத்தின்  ஊடாக இந்தக் கோரிக்­கை­களை முன்­வைக்­கலாம். அதற்­கான  ஏற்­பா­டு­களை  எங்­களால்  முன்­னெ­டுக்க  முடியும். 

கேள்வி : இலங்­கையில் வக்பு  சட்டம்  அமு­லி­லுள்­ளது. வக்பு சட்டம் தொடர்பில் உங்கள் கருத்­தென்ன?

பதில் : வக்பு சட்டம் ஓர் முக்­கிய சட்­ட­மாகும். வக்பு சட்­டத்தை இலங்கை  முஸ்­லிம்கள் மத்­தி­ர­மல்ல, அனைத்து முஸ்­லிம்­களும் கட்­டா­ய­மாகப் பின்­பற்­றி­யாக வேண்டும். 

கேள்வி : வடக்கு, கிழக்கு யுத்­தத்தில் முஸ்­லிம்­களும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். பல பெண்கள் வித­வை­க­ளா­கி­யுள்­ளார்கள்.  வித­வை­க­ளுக்கும் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களின் கல்­விக்கும் உலக முஸ்லிம் லீக் உதவி செய்­யுமா?

பதில்: இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு முஸ்லிம் லீக் மாத்­தி­ர­மல்ல, பல நிறு­வ­னங்கள் உதவி  செய்­து­வ­ரு­கின்­றன. மதீனா  பல்­க­லைக்­க­ழ­கத்தில்  அதி­க­மான இலங்கை  மாண­வர்கள் பயில்­கி­றார்கள். சவூ­தியில்  500 க்கும் மேற்­பட்ட பல்­க­லைக்­க­ழ­கங்கள் இயங்கி வரு­கின்­றன.  இஸ்­லா­மிய பீடம் மhத்­தி­ர­மல்ல மருத்­துவம், விஞ்­ஞானம், சமூ­க­வியல்,பொறி­யியல் போன்ற பல பீடங்கள் இயங்கி வரு­கின்­றன. ஆனால் இலங்கை  முஸ்­லிம்கள் இஸ்­லா­மிய பீடத்தை மாத்­தி­ரமே நாடு­கின்­றனர்.  ஆனால்  முஸ்­லிம்­க­ளுக்கு ஷரீஆ அறிவு அவ­சி­ய­மாகும். ஷரீ­ஆ­வினை அடுத்தே அனைத்து கற்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். அத­னா­லேயே சவூ­தியில்  இஸ்­லா­மிய கற்­கைக்கு ஷரீஆ பீடத்­துக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது. குர்­ஆனும் சுன்­னா­வுமே மக்­களை நல்­வழி நடத்­து­கி­றது. 

கேள்வி: சவூ­தி­யிலும் பள்­ளி­வா­சல்­களில் குண்­டுகள் வெடிக்­கின்­ற­னவே? ஏன் அங்கு  புரிந்­து­ணர்வு வளர்க்­கப்­ப­ட­வில்­லையா?

பதில்: சவூ­தியில்  இவ்­வா­றான சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்த நாம் மேற்­கொண்ட முயற்­சிகள் அனைத்­திலும் வெற்றி  கண்­டுள்ளோம். சவூ­தியில்  100 சத­வீத  பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஏனைய அரபு நாடுகள் எம்­மிடம்  பாது­காப்பு  தொடர்­பான பயிற்­சி­களைப் பெற்று வரு­கின்­றன. பாது­காப்பு சவூ­தியில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

கேள்வி: இலங்­கைக்கும், சவூதி அரேபியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு உலக முஸ்லிம் லீக் பங்களிப்புச் செய்கிறதா?

பதில்: இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுப்பாலமாக உள்ளது.  உலக முஸ்லிம் லீக் இலங்கை மக்களுக்கு  உதவிகள் செய்வதன் மூலம் இவ் உறவு மேலும் வலுவடைந்துள்ளது. மற்றும் தூதரகங்கள் ஊடாகவும், சர்வதேச   தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும் உறவுகள் பலப்பட்டுள்ளன. 

கேள்வி: இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன கூறப்போகிறீர்கள்?

பதில்: இலங்கை முஸ்லிம்களாகிய  நீங்கள் இரக்க சிந்தனையுள்ளவர்களாக இருங்கள். ஏனைய  மதத்தவர்களுடன் பொறுமையாக  நடந்து கொள்ளுங்கள் என்றார். 

14 comments:

  1. மகாநாடுகளின் நடத்துவதின் மூலமகாகவும், உலக கல்வியில் முன்னேருவதாலும், 'சகவாழ்வு' என்று சொல்லக்கூடிய இஸ்லாத்துக்கு புறம்பான கோட்பாட்டை பின்பற்றுவதாலும், முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகிடைக்கும் என்று பகல்கனவு காண்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாகும்.


    ஸஹாபாக்களும் எமது முன்னோர்களும் எதனூடாக கண்ணியம் அடைந்தார்களோ, அதனை விட்டுவிட்டு, வேறெந்த 'ஹிக்மத்தான' தீர்வைகொண்டும் எமக்கு கண்ணியம் கிடைக்காது.


    முஸ்லிம்களின் கண்ணியம் மீண்டும் கிடைப்பதற்கு ஒரேயொரு வழி, ஜிஹாத் செய்வதாகும்.

    பின்வரும் ஹதீஸை கவனியுங்கள்:


    عَنْ ابْنِ عُمَرَ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( إِذَا تَبَايَعْتُمْ بِالْعِينَةِ ، وَأَخَذْتُمْ أَذْنَابَ الْبَقَرِ ، وَرَضِيتُمْ بِالزَّرْعِ ، وَتَرَكْتُمْ الْجِهَادَ ، سَلَّطَ اللَّهُ عَلَيْكُمْ ذُلا لا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ ، سَلَّطَ اللَّهُ عَلَيْكُمْ ذُلا لا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ ، سَلَّطَ اللَّهُ عَلَيْكُمْ ذُلا لا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ )
    روى أبو داود (3462)


    அல்லாஹ்விங் தூதர் கூறியதாக, இப்ன் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நீங்கள் ஈனா என்று சொல்லப்படக்கூடிய வியாபாரத்தில் (வட்டிக்கு வேறு பெயர்களை வைத்து செயற்படுதல்) ஈடுபடுவீர்களானால், கால்நடைகளின் வாளை பற்றிப்பிடித்துக்கொள்வீர்களானால், விவசாயத்தில் திருப்தி காண்பீர்களானால், இன்னும் ஜிஹாதை விட்டு விடுவீர்களானால், அல்லாஹ் உங்கள் மீது ஒரு இழிவை சாட்டுவான். நீங்கள் திரும்ப மார்க்கத்தில் நுழையும் வரை அவ்விழிவு அகற்றப்படாது. அல்லாஹ் உங்கள் மீது ஒரு இழிவை சாட்டுவான். நீங்கள் திரும்ப மார்க்கத்தில் நுழையும் வரை அவ்விழிவு அகற்றப்படாது. அல்லாஹ் உங்கள் மீது ஒரு இழிவை சாட்டுவான். நீங்கள் திரும்ப மார்க்கத்தில் நுழையும் வரை அவ்விழிவு அகற்றப்படாது." என்று கூறினார்கள். [அபூ தாவூத் 3462]


    ஆக, யார் ஜிஹாதை விட்டுவிட்டு, வேறொரு தீர்வை முன்வைக்கிராரோ, அவர் தன்னை தானே ஏமாற்றிக்கொள்வதுடன், அவரை பின்பற்றுபவர்களையும் ஏமாற்றுகின்றார்.

    ReplyDelete
    Replies
    1. இவர் ிலங்கையில் IS தொடங்க சொல்கிறார்.
      நல்ல ஐடியா தான்

      Delete
    2. Sri Lanka Army is capable to destroy any threats to its country.

      Sri Lanka has already defeated Tamil terrorism.

      Delete
  2. Srilankavil ulla muslimkalukku periya ninaippu oru paruppum vekathudi mappu

    ReplyDelete
    Replies
    1. Mr sritharan ongada paruppa eallam adakki mudinji. So pothikottu iringa.

      Delete
  3. Mr. Sritharan ongada paruupa eallam nalla aathi vechi irikiranga so pothilottu iringa..

    ReplyDelete
  4. If this statement was told by the King of Saudi then sri lankan muslims have to worry and expect No any support from Arab muslims... But
    This Old Man just tour all countries wth the intention of deceive minority muslims showing as if he the King..
    Shame on him..
    SEND THIS OLD MAN BACK TO HIS COUNTRY...

    ReplyDelete
  5. Mr Sri neenga thinda paruppu pothum thane

    ReplyDelete
  6. இலங்கையில் இருந்துகொண்டு எமது பௌத்த சகோதரர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது முட்டாள் தனமாகும். அதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. ஒரு சில பேரினவாத சக்திகள் தமது அரசியல் நோக்கங்களுக்கு இனவாதத்தை தூண்டுகின்றன. ஆனால் கருணையையும் அன்பையுமே புத்தமதம் போதிக்கிறது, அதை பின்பற்றும் உணமையான பௌத்தர்கள் நாட்டில் நிறையவே உள்ளனர். அவர்கள் எமது தொப்புள் கொடி உறவுகள். எமது சகோதரர்கள்.

    ReplyDelete
  7. ஜிஹாத் என்றல் ஆயுதம் தூக்குவது என்பது பிழையான கருத்தாகும். உண்மையில் மனிதன் தனது குணத்தையும் பண்புகளையும் பழக்கவழக்கங்களையும் தூய்மை படுத்துவதற்கு தனது மனோ இச்சையுடன் செய்யும் போராட்டமே பெரிய ஜிஹாதாகும். அன்பு செலுத்துவதும் அநியாயம் செய்தவனை மன்னித்து அவனுக்கு உபகாரம் செய்வதும் கூட ஜிஹாதே. இன்று உலகில் ஜிஹாது என சொல்லிக்கொண்டு இஸ்லாத்தின் பெயரில் செய்யப்படும் போர்கள் , யுத்தங்கள் உண்மையான ஜிஹாது அல்ல.

    ReplyDelete
  8. We muslim never want anyones.pressure. we seek and suplicate to Allah. There is no pressure as forceful as Allahs pressure

    ReplyDelete
  9. I can see Hindu and Christian LTTE terrorists have come out to make some stupid unrelated comments here. Be Careful of these wolves. Haters, take care of your own society before preaching to others..

    ReplyDelete
  10. முதலில் நீங்கள் இயக்கப்பிரிவிலிருந்தும் வழிகெட்ட கொள்கைகளில் இருந்தும் வெளியேறி அல்லாஹ்விடம் தவ்பாசெய்து உண்மை முஸ்லிமாக மாறுவதட்கு உங்கள் நிலைக்கு எதிராக நீங்களே ஜிஹாத் செய்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  11. Don't worry dear Muslims.... Some of these hate commentators see problems in their own society not solved and disgusted. Now they try to just poke into our issues. So don't get upset. Let them comment but in their heart is hatred and fear only

    ReplyDelete

Powered by Blogger.