Header Ads



இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானை


அசாம் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்து செல்லப்பட்ட யானை 6 வாரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லையில் அமைந்துள்ள அசாம் மாநிலத்தில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அப்பகுதியில் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த யானைகளில் ஒரு பெண் யானை வெள்ளத்தில் சிக்கியது.

அந்த பெண் யானை கரை சேர முடியாமல் தத்தளித்த நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இந்நிலையில், அடித்துச் செல்லப்பட்ட யானை அண்டை நாடான வங்கதேசத்திலுள்ள ஜமால்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராம பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கயிறு மற்றும் சங்கிலியைக் கொண்டு யானையை கரைக்கு வெளியே இழுத்துள்ளனர்.

இதையறிந்த வங்கதேச வன அதிகாரிகள் விரைந்து வந்து யானையை மீட்டனர், சுமார் 1000 கிமீ தொலைவிற்கு அடித்து வரப்பட்டதால் மிகவும் சோர்வடைந்திருந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்போது, அந்த யானை வங்கதேசத்திலுள்ள சபாரி பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

No comments

Powered by Blogger.