Header Ads



சவூதி அரேபியாவுக்கு, யுனிசெப் கடும் கண்டனம்

ஏமன் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் சண்டையிட்டு வருகின்றன. அங்கு சண்டை நிறுத்தம் செய்வதற்கு கிளர்ச்சியாளர்களுடன் நடந்த பேச்சு வார்த்தை இந்த மாத தொடக்கத்தில் முறிந்து போனது. அதைத் தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப்படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அங்கு சாடா என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடம் மீது சவுதி கூட்டுப்படைகள் நேற்று  குண்டு மழை பொழிந்தன.

இதில் அப்பாவி குழந்தைகள் 10 பேர் கொல்லப்பட்டனர். 28 குழந்தைகள் படுகாயம் அடைந்தன. அந்தக் குழந்தைகள் 8 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

இந்த தாக்குதல்களுக்கு எல்லையற்ற டாக்டர்கள் உதவிக்குழு, சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை, ஹூதி கிளர்ச்சியாளர்கள், வெளியிட்டுள்ளனர். பள்ளி சிறார்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, சவூதி அரேபியாவுக்கு யுனிசெஃப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், குறிப்பிட்ட இடத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருப்பதாக, தகவல் கிடைத்ததன் பேரில், தாக்குதல் நடத்தியதாக சவூதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.

2 comments:

  1. மேற்கத்திய நாடுகளின் நிகற்சி நிரலை அமுல் படுத்தும், அப்பாவி சிறுவர்களை கொல்லும் இந்த கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் அடிப்படை தெரியாத பலர் நம்மில் இன்னும் இருக்கின்றார்கள்.

    ReplyDelete
  2. This is totally unacceptable. King Salman should be held responsible for this massacre. But they don't worry about it. They have the total blessings of the US government but not the US people. I wonder why UNICEF does not open its mouth when US bombs innocent people in Syria and other places.

    ReplyDelete

Powered by Blogger.