Header Ads



மகிந்த ராஜபக்சவுக்கு வெட்கமில்லை என்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்..?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எப்போதும் கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது எனவும் இதனால், டொக்டர் எஸ்.ஏ. விக்ரமசிங்க, சுதந்திரக் கட்சி கட்சியல்ல ஒரு முன்னணி எனக் கூறியதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று நடைபெற்ற சமூர்த்தி அதிகாரிகளுடன் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கட்சி எவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றை எடுக்கின்றது என்றால் அது கட்சியை இணைக்கவே அன்றி பிளவுப்படுத்த அல்ல.பாத யாத்திரை என்பது ஒரு சந்தேஷமான விடயம்.

3 முதல் 4 மில்லியன் மக்கள் வருவார்கள் எனக் கூறிய போதிலும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேரே பாத யாத்திரைக்கு வந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் செல்லும் போது ஹூ சத்தமிட்ட சம்பவம் வெட்க கேடான செயல்.

மகிந்த ராஜபக்ச அருகில் இருந்தவர்களே ஹூ சத்தம் போட்டனர்.

மகிந்த ராஜபக்சவுக்கு வெட்கமில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். வற் வரி என்பது உலகில் முற்போக்கான ஒரு வரி 2010 ஆம் ஆண்டு வற் வரி 20 வீதமாக இருந்தது.

தற்போது 15 வீதமாக அந்த வரி உள்ளது எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.