Header Ads



தம்புள்ளை பள்ளிவாசலுக்கு, சாராய கடைக்கருகில் காணி - முஸ்லிம்கள் தரப்பில் எதிர்ப்பு

-விடிவெள்ளி ARA.Fareel-

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­சலை புதிய இடத்தில் நிர்­மா­ணிப்­ப­தற்­காக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் ஒதுக்­கப்­பட்ட காணி மது­பா­ன­சா­லைக்கு அருகில் அமைந்­துள்­ளதால் பள்­ளி­வாசல் நிர்­வாகம் இதற்கு மறுப்புத் தெரி­வித்­துள்ளது. 

மது­பா­ன­சா­லைக்கு அரு­கா­மையில் பள்­ளி­வா­சலை நிர்­மா­ணிக்க முடி­யா­தெ­னவும் அதனால் புதுக்­கா­ணி­யொன்­றினை வழங்க ஏற்­பாடு செய்யும் படியும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி­டமும் மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கா­ர­யி­டமும் கோரிக்கை விடுத்­துள்­ளது. 

மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கா­ரையை தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­விய போது அவர் பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார். தம்­புள்ள பள்­ளி­வாசல் பிரச்­சி­னையைத் தீர்க்­காமல் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை அதி­கா­ரி­களே கால­தா­ம­தப்­ப­டுத்தி வரு­கின்­றனர். இத­னா­லேயே இப்­ப­கு­தியில் சிங்­கள முஸ்லிம் உற­வுக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்தப் பிரச்­சினை என்றோ தீர்க்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். இது தீர்க்­கப்­ப­டா­மைக்கு நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையே பொறுப்­புக்­கூற வேண்டும். பள்­ளி­வா­சலை இட­மாற்றிக் கொள்­வ­தற்கு உகந்­தவோர் இட­மொன்றை இனங்­கா­ணு­மாறு நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை அதி­கா­ரி­க­ளிடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றேன். 

அத்­தோடு தம்­புள்­ளை­யி­லி­ருந்து ஏற்­க­னவே அகற்­றப்­பட்ட இந்துக் கோயி­லுக்கும் காணி வழங்­கு­மாறும் பள்­ளி­வாசல் மற்றும் கோயில் பிர­தே­சங்­களில் வாழும் மற்றும் வாழ்ந்த குடும்­பங்­க­ளுக்கு தலா 10 பேர்ச் வீதம் காணி வழங்கும் படியும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையைக் கோரி­யி­ருக்­கிறேன் என்றார். 

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம்.சலீம்­தீனைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது ‘நகர அதி­கார சபை ஒதுக்­கி­யுள்ள காணி பள்­ளி­வாசல் நிர்­மா­ணத்­துக்கு உகந்­த­தாக இல்லை.

அருகில் மது­பா­ன­சாலை இருப்­பதால் இதற்கு நாம் விருப்பம் தெரி­விக்­க­வில்லை. தற்­போது ஒதுக்­கப்­பட்­டுள்ள காணி பள்­ளி­வா­ச­லி­லி­ருந்தும் 150 மீற்றர் தூரத்­திலே அமைந்­துள்­ளது. புதிய காணி ஒதுக்­கித்­த­ரு­மாறு கோரி­யுள்ளோம். 

தற்­போ­தைய பள்­ளி­வாசல் 41 பேர்ச் நிலத்­திலே அமைந்­துள்­ளது. எனவே பள்­ளி­வாசல் சகல வச­தி­க­ளு­டனும் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­காக 2 ரூட் காணி­கோ­ரி­யுள்ளோம்.

கோயி­லுக்கும் காணி வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் தற்­போது பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்­கள குடும்­பங்கள் 16 க்கும் காணிகள் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் கோரி­யுள்ளோம்.

பள்­ளி­வா­ச­லுக்­கான காணி முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்­துக்கு வழங்­கப்­பட்டு திணைக்­களம் ஊடாக நாம் பெற்றுக் கொள்­வ­தற்கு ஆவன செய்­யு­மாறு வேண்­டி­யுள்ளோம் என்றார்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் 2012 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­ம­கா­வி­காராதி­பதி இனா­ம­லுவே தேரரின் தலை­மை­யி­லான குழு­வி­னரால் தாக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தம்­புள்ளை புனித பூமியில் பள்­ளி­வாசல் இருக்­கக்­கூ­டாது அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றே தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அன்­றி­லி­ருந்து இப்­பள்­ளி­வாசல் பிரச்­சினை தொடர்ந்து கொண்­டே­யி­ருக்­கி­றது. பள்­ளி­வாசல் நிர்­வாகம் பொருத்­த­மான காணி­யொன்று வழங்­கப்­பட்டால் இட­மாறிக் கொள்­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.