Header Ads



பள்ளிவாசல் இமாம் படுகொலை - நீதிகேட்டு வீதிக்குவந்த அமெரிக்க முஸ்லிம்கள்

இஸ்லாமிய நாடுகளில் நடை பெறும் சிறு சிறு நிகழ்வுகளை பெரிது படுத்திமுஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமிய நாடுகள் மீது தீவிரவாத முத்திரையை பதிப்பது அமெரிக்க மற்றும் உலக ஊடகங்களின் வழமை

ஆனால் இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு அதிபயங்கர தீவிரவாதம் இஸ்லாமிய விரோதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்ற பட்டது

ஆம் நியுயார்க் நகரில் இரு தினங்களுக்கு முன் இறைஇல்லம் ஒன்றில் பணியாற்றிய இமாமையும் அவரின் உதவியாளரையும் அமெரிக்க பயங்கரவாதி ஒருவன் சுட்டு கொன்றான்

இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை தலைப்பு செய்திகளாக மாற்றவில்லை

சம்பவத்தில் தொடர்புடையவன் முஸ்லிம் பெயர் தாங்கியாகவும், பாதிக்க பட்டவர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாகவும் இருந்திருந்தால்  அந்த செய்தி உலக மீடியாக்களில் தலைப்பு செய்தியாக மாறியிருக்கும்

மீடியாக்கள் முக்கியத்துவம் தரவில்லை என்றாலும் அமெரிக்க முஸ்லிம்கள் களத்திற்கு வந்தார்கள் வீதியில் இறங்கி போராடினார்கள் அமெரிக்க அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுத்தார்கள்

இந்த அழுத்ததின் விழைவாக அமெரிக்க அரசு சம்பவத்தில் தொடர்ப்புடையவர் என்று சந்திக்க படும் சிலர்களை கைது செய்திருக்கிறது

வன்முறையை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது உரிய சட்டநடிவடிக்கை எடுக்க படும் என்று அமெரிக்க அரசு எச்சரித்திருக்கிறது

1 comment:

  1. They may release the murders saying they have physiological issues.

    STATES of DOUBLE STANDARD.

    STATES feared of ISLAM the TRUE Final Religion of GOD who created them us us.

    ReplyDelete

Powered by Blogger.