Header Ads



கூகுளில் வேலை வேண்டுமா..?


உலகின் டாப் நிறுவனங்களில் ஒன்றான கூகுளில், பணிக்கு சேர வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவு. ஒவ்வொரு 90 நாட்களுக்கும், சராசரியாக 1,275 பேரை கூகுள் நிறுவனம் பணியில் அமர்த்துகிறது. அதற்கு டாப் யுனிவர்சிட்டி டிகிரி, 90% மார்க் என நீங்கள் நினைக்கும் எதுவுமே தேவையில்லை. வேறு எந்த விஷயத்தை கூகுள் உங்களிடம் எதிர்பார்க்கிறது தெரியுமா?

இதுபற்றி கூகுள் நிறுவனத்திற்கு பொறியாளர்களை பணிக்கு எடுக்கும் கேவ் பிளாக் கூறுகிறார். "நீங்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் என்பது எல்லாம் எங்களுக்கு முக்கியமல்ல.

1. கூகுளின் கதவுகள் எப்போதும், எல்லோருக்காகவும் திறந்தே இருக்கும். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் வரலாம். பிரபலமாகாத ஒரு கல்லூரியிலும் நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் கூகுள் கவனிப்பது உங்களின் தனிப்பட்ட திறமையை மட்டுமே!

2. அதே போல கூகுளின் இன்ஜினியர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற பிம்பத்தையும் உடையுங்கள். எங்கள் இன்ஜினியர்களை பல்வேறு பல்கலைக்கழகங்களின் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கவும் அனுப்பியுள்ளோம். அவர்கள் கடமை பணி செய்வது மட்டுமல்ல.
                                    
3. நீங்கள் பள்ளியில் எடுத்த மதிப்பெண்கள் மட்டுமே, உங்களுக்குப் போதாது. அது உங்களது முழு திறமையும் உணர்த்தி விடாது. எனவே புரோகிராமிங் அசைன்மென்ட்ஸ், கோடிங் ஹேக்கத்தான் போட்டிகள் போன்றவற்றில் உங்கள் அனுபவம் மிகவும் முக்கியம்.

4. பொறியாளர்கள் அனைவரும், கோடிங்கில் கில்லியாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லா நிறுவனங்களும் விரும்பும். கூகுளும் அதையேதான் விரும்புகிறது. 45 நிமிடங்களுக்குள் 3 கோடிங் வினாக்களுக்கு பதிலளிக்க முயலவேண்டும்.

5. கூகுள் நேர்காணல்களை எதிர்கொள்ளும் போது, மிகவும் தைரியமாக, தன்னம்பிக்கையுடன் இருங்கள். டென்ஷனான தருணங்களையும் கூட, மிகவும் அமைதியாக கலையாளுங்கள். தொழில்நுட்பத் திறனை முழுமையாக வெளிப்படுத்துங்கள். இது உங்களை நேர்காணல் செய்பவருக்கு உங்களைப் பற்றிய வெளிப்படையான பிம்பத்தை ஏற்படுத்தும்."

No comments

Powered by Blogger.