Header Ads



இலங்கையில் ரஷ்யாவின் போர் விமானங்கள் - புட்டினும், மைத்திரியும் அனுமதி

இலங்கை விமானப்படையினரின் பயன்பாட்டுக்காக அதி நவீன ஆறு சுகோய் ரக தாக்குதல் விமானங்களை ரஸ்யா வழங்கவுள்ளது.

இலங்கைக்கு தாக்குதல் விமானங்களை வழங்க ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அனுமதி வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் சலுகைக் கடன் ஒன்றின் அடிப்படையில் சுகோய் தாக்குதல் விமானம் வழங்கப்படவுள்ளது.

இந்த சுகோய் 31 ரக தாக்குதல் விமானங்களை பார்வையிடுவதற்கு இலங்கை விமானப்படைத் தளதிப ககன் புலத்சிங்கள மற்றும் ரஸ்யாவிற்கான இலங்கைத் தூதரக பாதுகாப்பு அதிகாரி ஆர்.கே.லியனகெ ஆகியோர் விமான உற்பத்திச்சாலைக்கு நேரில் சென்றுள்ளனர்.

இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் கீபீர் மற்றும் மிக் ரக தாக்குதல் விமானங்கள் சேவையிலிருந்து அகற்றப்பட உள்ளதனால், இந்த சுகோய் ரக விமானங்கள் ரஸ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார் என கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானிடமிருந்து இலங்கை தாக்குதல் விமானம் கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த காலங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

ரஸ்யாவின் சுகோய் ரக விமானங்கள் எப்போது கொள்வனவு செய்யப்படும் என்பது பற்றிய விபரங்களை பாதுகாப்பு அமைச்சோ அரசாங்கத் தரப்புக்களோ உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

1 comment:

Powered by Blogger.