Header Ads



"படிப்படியா மேல போறதுதான் நல்லது - அது வாழ்க்கையா இருந்தாலும் சரி, மாடியா இருந்தாலும் சரி"

‘படிப்படியா மேல போறதுதான் நல்லது. அது வாழ்க்கையா இருந்தாலும் சரி… மாடியா இருந்தாலும் சரி…’ ரஜினி ஸ்டைலில் பன்ச் பேசும் அளவு படியேற்றம் பல்வேறு பலன்களைத் தருகிறது. அப்படி என்னென்ன லாபங்கள்... ‘படி’ப்போம்!

படிகளைப் பயன்படுத்தும்போது ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.

எலும்பு மூட்டுகள் மற்றும் தசைகளை ஆரோக்கியமாக கட்டமைப்பதிலும் படியேற்றம் பயனளிக்கிறது.

நாள் ஒன்றுக்கு இரண்டு படிகள் ஏறினால் ஓர் ஆண்டில் 6 கிலோ எடை குறையலாம் என்பது அதிசயம்… ஆனால், 

உண்மை!

படியேறும்போது நிமிடத்துக்கு 11 கலோரிகள் வரை செலவழிக்கப்படுகிறது. இது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதற்கு இணையானது.

படிகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான எடையைப் பெறுவதற்கும், தொடர்ந்து பராமரிப்பதற்கும் பெரிதும்  உதவுகிறது.

லி ஃ ப்ட்டை பயன்படுத்துகிறவர்கள் சீக்கிரம் ‘மேலே’ செல்கிறார்கள். படிகளைப் பயன்படுத்துகிறவர்கள் மெதுவாகவே ‘மேலே’ செல்கிறார்கள். ஆம்…வாரத்தில் 55 படிகளுக்கு மேல் ஏறுகிறவர்களின் உயிரிழப்பு அபாயம் பெருமளவு குறைகிறது.

படியேறுவதற்கும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குறிப்பாக, எலும்புகளின்  வலிமையைப் படியேற்றம் மூலம் மேம்படுத்திக்கொள்ள முடியும். மெனோபாஸ் காலத்தில் இருக்கும் பெண்களுக்கு கால்சியம் பற்றாக்குறையால் எலும்பின்  அடர்த்தி இயல்பாகவே குறையும். இவர்கள் படிகளைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

No comments

Powered by Blogger.