August 24, 2016

மாட்டுக்கு இருக்கும் மதிப்பு கூட, மாணவர்களுக்கில்லை

-ARM INAS-

மாடுகளை அறுக்கும் போது ஒரு மாட்டை அறுப்பதனை பக்கத்தில் இருக்கும் மாடு பார்த்துவிடாமல் அறுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பாருங்கள் அடுத்த செக்கன் சாகப் போகும் மாட்டின் மனநிலையை கூட கருத்தில் கொண்டு அறிவுறுத்தால் தந்துள்ள மார்க்கம் இது.

ஆனால் நான் இன்று கேள்விப்பட்ட விடயம் எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாட்டுக்கு கொடுக்கும் மதிப்பை அக்கறையை கூட நாம் மனிதனுக்கு கொடுப்பதில்லை.

ஒரு தாய் தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

தன் மகன் தரம் 5 இல் கற்பதாகவும் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியதாகவும் தெரிவித்தார். தனது மகன் தரம் 5 இல் சிலகாலம் ஓரளவு படிப்பில் அக்கறையுடன் இருந்ததாகவும் பிறகு சில மாதங்களின் பின் படிப்பில் மிகவும் ஆர்வம் குறைந்து ஏனோ தானே என்று இருப்பதாகவும் கவலையுடன் சொன்னார்.

தன் மகனின் இந்த நிலைமைக்கான காரணமாக அந்த தாய் இந்த விடயத்தை என்னிடம் சொன்னார்.

புலைமப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இரவு நேர விசேட வகுப்புகள் தினமும் நடாத்தப்படுவதாகவும். அதற்கு ஒவ்வொரு வகுப்பிலும் 20 பிள்ளைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் 20 பிள்ளைகளை தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்பட்ட பரீட்சையில் தனது பிள்ளை குறைவான புள்ளிகள் எடுத்ததால் தன் பிள்ளையை அந்த இரவு நேர வகுப்பு அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த விசேட வகுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தனது மகனுக்கு படிப்பில் இருந்த ஓரளவான ஈடுபாடு கூட இல்லாமல் போனதாகவும் எப்போதும் தனக்கு தானே ஒரு தாழ்வுமனப்பான்மையுடன் இருப்பதாகவும் தன்னால் இதற்கு எதுவுமே செய்ய முடியவில்லை என்றும் மிகுந்த மனவருத்தத்துடன் அந்த தாய் தனது கவலையை கூறினார்.

எவ்வளவு பெரிய அக்கிரமம் இது?
எத்தனை பெரிய அநீதி இது?

பொதுவாக அனைத்து பிள்ளைகளையும் சமாளிப்பதில் ஆசிரியர்களுக்கு பல சவால்கள் இருப்பது உண்மை.

அதன் காரணமாகத்தான் பாடசாலை நிர்வாகம் படிப்பில் ஈடுபாடு காட்டும் 20 பிள்ளைகளை மட்டும் தெரிவு செய்திருப்பார்கள். அதில் எந்த தவறுமில்லை.

ஆனால் இந்த விடயம் 20 மாணவர்களுக்குள் தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வது பாடசாலையின் பொறுப்பு.
அடுத்த செக்கன் சாக இருக்கும் மாட்டின் மனநிலைக்கே பாரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் போது நாளைய தலைவர்களாக வரப்போகும் இந்த பிஞ்சுக் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படாமல் இருப்பதில் நாம் எத்தனை கவனம் செலுத்த வேண்டும்.

பாவம் அந்த தெரிவு செய்யப்படாத மாணவர்கள்.
அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்கு
எப்படி பரிகாரம் தேடிக்கொள்வார்களோ
இந்தப் பாவத்தை செய்தவர்கள்.

அடுத்த பாடசாலையைவிட அதிகம் மாணவர்கள் எமது பாடசாலையில் சித்தியடைய வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையில், கௌரவப் போட்டியில்  பல ஆயிரம் மாணவர்களின் எதிர்காலத்தை இப்படி குழி தோண்டிப் புதைக்கிறது பல பாடசாலைகள்.

2 கருத்துரைகள்:

Pothuvaha arivu koodiya maanavarhalai vida oralavu kalvi katkum maanavarhalai than ookuvikkanum aanal thatpothaya kaalakattathil aasiriyarhal thangalathu puhalchikaha(thani patta noakathukaha) oru sila kettikaara maanavarhalai melum muyatchi seiya thoonduhirarhal ithanal than saha eanaya maanavarhal manam paathipadaihirathu

Thid type of education system is not only in SL, all over in 3rd world countries. But you cannot see it in Western countries.

அது சரி, ஆணால் மாட்டு கதை கொமடிக்காக எழுதப்பட்டதா?, அல்லது சுயபுராணமா?

Post a Comment