Header Ads



ஒரு வகுப்புடனும், ஒரு ஆசிரியையுடனும் இயங்கும் முஸ்லிம் பாடசாலை - உதவுமாறு அழைப்பு


-ஹரீஸ் ஸாலிஹ்-

2004 சுனாமி அணர்த்தத்தினால் இலங்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டது முஸ்லிம்களே. அதிலும் ஹம்பாந்தோட்டை பிரதேச முஸ்லிம்களே . இது நடந்து சில வருடங்களுக்குப் பிறகு ஹம்பாந்தோட்டை நகரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நகரப் புறத்தில்  இருந்து தள்ளி  'Tzuchi' எனும் பிரதேசத்தில் வீடுகள் வழங்கப்பட்டன . எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகள் கடந்த 10 ஆண்டு காலமாக பல கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள நகரப்புற பாடசாலைக்கு வந்து கொண்டிருந்தனர் .

இந்தக்  கஷ்ட நிலையை தவிர்க்க முஸ்லிம்களின் உதவியால் 2016 ஆம் கல்வி ஆண்டிலிருந்து  'Tzuchi' பிரதேசத்தில்  முஸ்லிம் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளது. எனவே அப்பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்கு இது ஒரு பேருதவியாக அமைந்துள்ளது .15 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப் பட்டுள்ள இப்பாடசாலையில் அதிபரும் ஒரு ஆசிரியருமே தற்போது சேவை புரிந்து கொண்டிருக்கிறார்கள் . எதிர்வரும் ஆண்டுகளில் புது மாணவர் சேர்ப்பும் இதனால் வகுப்புக்கள் கூடுதலும் எதிர்பார்க்கப் படுகின்றது .

இப்பாடசாலையின் அடிப்படைத் தேவைகள் எவ்வளவோ இருக்கின்றன .மதில், மலசல கூட வசதி ,  சிற்றுண்டிச் சாலை,பாடசாலை உபகரணங்கள் , மாணவர்களுக்கு சீருடை , பாதணி ,எழுதுபொருட்கள் உட்பட இன்னும் பல தேவைகள் காணப்படுகின்றன .மிகவும் வரிய குடும்பங்களே இப்பிரதேசத்தில் வசிக்கின்றன எனவே எங்கள் சமூகத்தில் இருக்கும் தனவந்தர்கள் இந்த சமூகத் தேவையை கருத்தில் கொண்டு முன் வந்து உதவுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம் .

எமது சமூகத்தின் கல்வித் தேவையை சீர் செய்ய  உங்கள் பங்களிப்புகளை செய்ய முன்வாருங்கள் 
தொடர்புகளுக்கு 
அதிபர் 

அதிபர்
முஹம்மத் இம்தியாஸ் -0718139274


No comments

Powered by Blogger.