Header Ads



அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள, கீதா குமாரசிங்க

கூட்டு எதிர்க்கட்சியினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாத யாத்திரையில் இரண்டு கோடி மக்கள் பங்கேற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது…

பசியை தாங்கிக்கொண்டு, மழை வெயிலை கருத்திற்கொள்ளாது கொழும்பிலிருந்து கண்டி நோக்கி வந்த கோடிக்கணக்கான மக்கள் பாத யாத்திரையில் பங்கேற்றனர். ஆகக்குறைந்தது இந்த பாத யாத்திரையில் இரண்டு கோடி பேர் பங்கேற்றிருப்பார்கள்.

இதனைப் பார்த்த சிலர் மண்ணெண்ணை ஊற்றப்பட்ட சாரைப்பாம்புகளைப் போன்று துடிக்கத் தொடங்கியுள்ளனர். துடிப்பதற்கு ஒன்றுமில்லை இதுவே மக்களின் ஆணையாகும்.

வெறுமனே மக்கள் வீதியில் இறங்கவில்லை, இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டே வீதியில் இறங்கினார்கள்.

மக்கள் எதிர்ப்பு மத்தியில் சிலர் மக்களை இழிவுபடுத்துகின்றனர். சிலர் இந்த அப்பாவி மக்களை எலிகளாக பார்க்கின்றனர்.

கோடிக்கும் அதிகமான மக்கள் வெள்ளமொன்ற திரண்டு அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை வெளியிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரபல திரைப்பட நடிகையான கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து குடியுரிமையுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மொத்த சனத்தொகை இரண்டு கோடி என இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவிக்கின்றமை கவனிக்கப்பட வேண்டியது.

9 comments:

  1. Where's that Guinness Book ? Look at the standard of
    Mahinda boot lickers !

    ReplyDelete
  2. தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் சந்திர்க்காவும் சேர்ந்துதான் இலங்கையில் இரண்டு கோடி மக்கள் அப்படியானால் இவரின் கருத்துப்படி இவர்களும் அங்கு சென்று இருந்தார்களா? இந்த நாட்டில் என்ன நடக்கிறது

    ReplyDelete
  3. Mappu thallku eariyathu irangavilla

    ReplyDelete
  4. ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம்,என்பது போல நமது பா மன்றத்தின் உறுப்பினர்களின் அறிவுஞானத்தையும், கீதாவின் செவ்வியிலிருந்து கணிப்பிடலாம்.பா மன்றத்தில் உள்ளவர்களில் 40% மானவர்கள் A/L பரிட்சைக்கு தோற்றாதவர்கள் என்று ஒரு பத்திரிகையில் பார்த்த ஞாபகம்.

    ReplyDelete
  5. அங்கு நான் போகவே இல்லையே

    ReplyDelete
  6. 2miilion people participated in that rally but each people can bring another 10 including him/ her .she calculated with their supporters too .

    ReplyDelete
  7. தனது நாட்டின் சனத்தொகையைத் தெரியாத ஒரு விசித்திரமான பாரளுமன்ற உறுப்பினர்!

    ReplyDelete
  8. ithallam ketkanumndu thala vithi

    ReplyDelete

Powered by Blogger.