Header Ads



ஆயுதம் எடுப்போம்..!

ன்று எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு ஒரு பெரிய சோதனைகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. சில முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் சோதனைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு அடைக்கலம் தேடி போனவர்கள், அங்கேயும் பல சோதனைகளை சந்திக்கிறார்கள். சோதனைக்கு மேல் சோதனை அடிக்கு மேல் அடி அடி விழுந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இப்பொழுது காஷ்மீர் அங்கே பெரும்பாலும் முஸ்லிம்கள் தான் வாழ்கிறார்கள். இந்திய இராணுவத்தினால் சோதனைகளை முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள்.

அவர்களுக்காக நிறைய முஸ்லிம்கள் வீதியில் நின்று போராட்டமும், ஆர்ப்பாட்டமும் செய்து கொண்டு வருகிறார்கள். காஷ்மீரில் நடக்கும் அநியாயங்களை வலைத்தளங்கள் மூலமாக நாம் அறியலாம்.

இந்த பிரச்சனைகளுக்கு என்ன தான் தீர்வு? எப்படித்தான் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது?

அநியாயங்களை பார்த்து கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது. உள்ளம் துடிக்கிறது, உணர்ச்சி பொங்குகிறது, கோபமும் வேகமும் வருகிறது. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் நாம் இருக்கிறோம்! நம்மால் முடிந்தது ஆர்ப்பாட்டமும் போராட்டமும், வலைத்தளங்கள் மூலமாக நம்முடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறோம். ஆனால் இதுவரை எந்த பலனும் கிட்டவில்லை.

இவைகளினால் நமக்கு எந்த பலனை தராது. கூச்சல் போடுவது வீதியில் நின்று ஆர்ப்பாட்டம் பண்ணுவது, போராடுவது இவைகள் நமக்கு எப்பொழுதும் இந்த இந்திய நாட்டில் எந்த ஒரு பலனையும் தராது. இதுவரை நாம் செய்த பல போராட்டங்கள், ஆவேசங்கள், ஆர்ப்பாட்டம் நமக்கு என்ன ஒரு நல்ல தீர்வு தந்ததா? ஏதாவது முஸ்லிம்களுக்கு பலன் கிட்டியதா? இல்லவே இல்லை! ஏமாற்றம்தான் நமக்கு கிடைத்தது!

அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறான். அவனுக்கு எல்லாம் தெரியும்! அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் இந்த தருணத்தில்..? அல்லாஹ் இரக்கமுள்ளவன். அவனைவிட இரக்கமுள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா?

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: "என்னிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நான் உங்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்கிறேன்." "எனது அடியார் என்னை அழைப்பாராயின் நிச்சயமாக நான் (அவருக்கு) மிக சமீபத்தில் இருக்கிறேன். அழைப்போரின் அழைப்புக்கு பதில் சொல்பவனாகவும் இருக்கிறேன்." (அல்குர்ஆன்)

உலகத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்காக நாம் எடுக்க வேண்டிய ஆயுதம் இந்த ''துஆ'' இந்த துஆவைப் பற்றி ஒரு நீண்ட விளக்கமே எழுதலாம்..

காஷ்மீர் மக்களுக்காக நாம் அல்லாஹ்விடம் அழுது நம் பிரச்சனை போன்று தூய உணர்வோடு துஆ கேட்க வேண்டும் அன்பர்களே!

துஆ கேட்பது வணக்கத்தின் முக்கிய அம்சமாய் இருக்கும். துஆ கேட்பது ஒரு சிறந்த வணக்கமாக இருக்கும். இறைவனிடம் துஆவை விட மிகைத்த சங்கையான பொருள் வேறொன்றுமில்லை. துஆ கேட்பதை விடுவது பாபாச் செயல்களுள் ஒன்றாகும். எவர் துஆ கேட்கவில்லையோ அவர்மீது அல்லாஹ் கோபப்படுகிறான். துஆ கேட்பது முஃமினின் ஆயுதமாகும்.

பெண்கள் வீதிக்கு வந்து போராடுவதினால் எந்த பலனும் இல்லை, அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு அல்லாஹ்விடம் தொழுது கண்ணீர் வடித்து கேட்டால் அல்லாஹ் நிச்சயமாக அந்த துஆவுக்கு பதில் தருவான், அவன் நாடினால் உடனே தீர்வு கிட்டும். மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

''சோதனை எவ்வளவு கடுமையானதாய் இருக்குமோ அதே அளவு பெரிய வெகுமதி கிடைக்கும். (ஆனால் மனிதன் சோதனைக்கு அஞ்சி சத்தியப் பாதையிலிருந்து ஓடிவிடக் கூடாது) அல்லாஹ் ஒரு குழுவினரிடம் அன்பு செலுத்தும்போது அவர்களை (மேலும் புடம் போட்டுத் தூய்மைப்படுத்துவதற்காக) சோதனைகளில் ஆழ்த்துகின்றான் . எவர் இறைவனின் தீர்ப்பைக் குறித்து திருப்தி கொண்டிருக்கிறாரார்களோ அவர்களால் அல்லாஹ் மகிழ்ச்சியடைகின்றேன். எவர் இந்தச் சோதனைகளில் அல்லாஹ்வைக் குறித்து அதிருப்தியடைந்து விடுகின்றார்களோ அவர்களைக் குறித்து அல்லாஹ்வும் அதிருப்தி அடைகின்றான். (நூல்: .திர்மிதி)

நாம் செய்ய வேண்டிய ஒன்று, அல்லாஹ்விடம் உள்ளத் தூய்மையுடன் எல்லா முஸ்லிம் மக்களுக்காக, மற்ற மக்களுக்காக துஆச் செய்வோம். இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக அல்லாஹ் நம்முடைய பிரார்த்தனைக்கு பதில் தருவான். ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை நம் மனதில் ஆழமாக பதிய வைக்கவேண்டும்! மாற்றமாக நாம் எதுவும் செய்ய கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்! நாம் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களுக்கு எடுத்து சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்! இன்ஷாஅல்லாஹ் நாம் ஒவ்வொருவரும் இரண்டு அல்லது ஒரு முஸ்லிம் அல்லாத மக்களை நரகத்திலிருந்து அவர்களை சுவனத்தின் பக்கம் கொண்டு செல்லுவோம்.

அல்லாஹ் நம் அனைவரையும் முஸ்லிமாக மரணிக்க செய்வானாக!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

-சத்திய பாதை இஸ்லாம்

No comments

Powered by Blogger.