Header Ads



கழுத்தை அறுத்துக் கொள்வாரா மஹிந்த..? பிரபாகரனுக்கு 8,000 இலட்சம் வழங்கியதற்கு ஆதாரம் உண்டு..!

முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு பணத்தை வழங்கவில்லை என்றால், அதனை அச்சமின்றி நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார். 

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும்போதே அவர் இந்தச் சவாலை விடுத்தார். 

மகிந்த ராஜபக்ஷ, தனது சகோதரர் பசில் ராஜபக்ஷ மற்றும் கொழும்பில் இருந்து சேறுபூசும் புலியான டிரான் அலஸும் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு பணத்தை வழங்கினர். இதனை நாங்களும் அறிந்திருக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் புலிகளுக்கு பணத்தை வழங்கினார்.  ஜப்பான் சென்றிருந்த  மகிந்த, தான் ஒரு டொலர் பணத்தையாவது கொள்ளையிட்டிருந்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாக கூறியிருந்தார். 

விடுதலைப் புலிகளுக்கு தான் ஒரு ரூபா பணத்தை கூட கொடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு மகிந்தவுக்கு  சவால் விடுக்கின்றேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மகிந்த ராஜபக்ஷ 8 ஆயிரம் இலட்சம் ரூபாவை வழங்கினார் என்பதற்கான கடிதங்களும் ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. 

தற்போது அரசியலமைப்பு மரணப் பொறி பற்றி பெரும் கதைகளை பேசி வருகின்றனர். அரசியலமைப்பு சட்டம் ஒன்றை இயற்ற பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும் இணைந்துள்ளனர். மகிந்த ராஜபக்ஷவும் அதில்  இருக்கின்றார். வீரவன்ஸவும் அதில் இருக்கின்றார். மேலும், அரசியலமைப்புச் சட்டத்தை இயற்ற தலைமைத்துவச் சபை ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த தலைமைத்துவச் சபைக்கு மகிந்த இரண்டு பேரை அனுப்பியுள்ளார். ஒருவர் தினேஷ் குணவர்தன மற்றையவர் பிரசன்ன ரணதுங்க. அரச  நிதிச் சபையின் தலைவர் பந்துல குணவர்தன, தினேஷýம் பந்துலவும் அரசியலமைப்பு மரணப் பொறி எனக் கூறி பேரணியில் செல்கின்றனர். இவர்களும் அதில் உள்ளனர். இவர்கள் அதில் தலைவர்களாகவும் இருக்கின்றனர். 

இது இவர்கள் நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா. புதிய அரசியலமைப்புச் சட்டம் மரணப் பொறி எனக் கூறி அதிலிருந்து விலக இவர்களுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் அல்லவா எனவும் சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார். 

1 comment:

  1. You have been talking for years, why do not you prove this to the Nation rather than asking Mahinda to disprove.....

    ReplyDelete

Powered by Blogger.