Header Ads



அதி நவீன வசதிகளுடன் வெளியாகியது, சாம்சங் கேலக்ஸி நோட் 7


நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் நிறுவனத்தின், புதிய அறிமுகமான கேலக்ஸி நோட்7, ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒருங்கே கொண்டதோடு வலுவான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக நோட்7 இருக்கும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேலக்ஸி நோட்7 சிறப்பு அம்சங்கள்:

பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஐரிஸ் ஸ்கேனர் மூலம் கண்களை கொண்டே போனை அன்லாக் செய்ய முடியும். கைரேகை சென்ஸார், தண்ணீர், தூசு உட்புகாத தொழில்நுட்பம், எஸ்-பென் ஆகிய முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தவிர 15ஜி.பி. அளவு கொண்ட சாம்சங் கிளவுட் வசதி, 5.7 அங்குல எச்.டி. டிஸ்பிளே, ஆன்ட்ராய்ட் 6.0.1 இயங்குதளம், 4ஜி.பி. ரேம், 64ஜி.பி. சேமிப்பகம் என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட நோட்7 பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும், 3500mAh பேட்டரி, நோட்7 நீண்ட நேர பயன்பாட்டிற்கு உதவும். 5 அடி ஆழ தண்ணீரில் 30 நிமிடங்கள் நோட் 7-ஐ வைத்து சோதனை செய்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதன் விலை 55,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.