Header Ads



52 விசாரணைகள் நடத்திமுடிப்பு - 5 ஆயிரத்து 300 கோடி ரூபா நிதி மோசடி அம்பலம்


பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இதுவரை நடத்தி முடிந்துள்ள நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான 52 ஆவணங்களின் அடிப்படையில் 5 ஆயிரத்து 300 கோடி ரூபா மோசடி தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான 306 முறைப்பாட்டு ஆவணங்கள் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்துள்ளதுடன் அவற்றில் 52 முறைப்படுகள் குறித்து விசாரணைகள் நடத்தி முடிக்கப்பட்டு அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 11 அறிக்கைகள் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசுடமையாக்கப்பட்டுள்ள சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் 15 கோடி ரூபா பணமும் அதில் அடங்கும்.

பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான பல கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களுக்கு உரிமையை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் அரசுடமையாக்குமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தை கோரியது.

இதேபோல் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்புச் செய்துள்ளவர்கள் சம்பந்தமாக வெளிவிவகார அமைச்சின் ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்கு அமைய பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

No comments

Powered by Blogger.