August 15, 2016

இலங்­கையை சேர்ந்த 45 பேர் ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்பில் இணைவு - நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

-விடிவெள்ளி-

மத்­திய கிழக்கு நாடு­களில் இருந்தும் ஆசிய நாடு­களில் இருந்தும் பயங்­க­ர­வாத இயக்­க­மான ஐ.எஸ்.  இயக்­கத்தில் இணைந்­து­கொள்ளும் நபர்கள் இலங்­கையை அடித்­த­ள­மாக பயன்­ப­டுத்­து­வது குறித்து வெளிவரும் செய்­தி­களை  சாதா­ர­ண­மாக கருத முடி­யாது எனவும் இது  தொடர்பில் உள்­நாட்­டிலும் அதிக கவனம் செலுத்­தப்­படும் எனவும் பாது­காப்பு தரப்பு தெரி­வித்­துள்­ளது. 

புல­னாய்வு  பிரிவை மேலும் பலப்­ப­டுத்தும் விசேட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும்  பாது­காப்பு தரப்பு தெரி­வித்­தது. 

மத்­திய கிழக்கு நாடு­களில் பர­வி­வரும்   பயங்­க­ர­வாத அமைப்­பான ஐ.எஸ் அமைப்பில் இணைய முயற்­சிக்கும் தெற்­கா­சி­யர்கள் தமது பய­ணப்­பா­தை­யாக இலங்­கையில் யாழ்ப்­பா­ணத்தை பயன்­ப­டுத்தி வரு­வ­தாக இந்­திய புல­னாய்வுப் பிரிவு மற்றும் இந்­தி­யாவில் இயங்­கி­வரும் முக்­கிய செய்தி நிறு­வ­னங்கள் தெரி­வித்­துள்ள நிலையில் இந்த விவ­காரம் தொடர்பில் பாது­காப்பு தரப்­பிடம் வின­வி­ய­போதே அவர்கள் இதனை உறு­திப்­ப­டுத்­தினர். 

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன குறிப்­பி­டு­கையில்,

மத்­திய கிழக்கு நாடு­களில் இயங்­கி­வரும்  பயங்­க­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்  அமைப்பில் இணைந்­து­கொள்ளும் வகையில் ஆசிய நாடு­களில் இருந்து  முஸ்லிம்கள் பய­ணிக்­கின்­றமை தொடர்ச்­சி­யாக ஆசிய நாடு­க­ளுக்கு நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

அண்­மையில் இந்­தி­யாவில் இருந்து வெளி­வரும் செய்­திகள் தொடர்ச்­சி­யாக இந்த விவ­காரம் தொடர்பில் தக­வல்­களை  தந்த வண்­ணமே உள்­ளன. இப்­போதும் யாழ்ப்­பாண மார்க்கத்தை பயன்­ப­டுத்தி ஆப்­கா­னிஸ்தான் போன்ற நாடு­க­ளுக்கு பய­ணிப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் அச்­சு­றுத்­த­லான வகையில் அல்­லது இவ்­வா­றான பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு ஆத­ர­வாக இலங்கை மக்கள் செயற்­ப­ட­வில்லை என்­று உறு­தி­யாக தெரி­விக்க முடியும். 

 எமது புல­னாய்வு பிரி­வினர் இந்த விட­யத்தில் மிகவும் அக்­க­றை­யு­டனும் அவ­தா­னத்­து­டனும் செயற்­பட்டு வரு­கின்­றனர். எவ்­வாறு இருப்­பினும் தேசிய பாது­காப்பை சீர­ழிக்கும் செயற்­பா­டு­க­ளுக்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்கமாட்டோம். தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான வகையில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் அலட்­சி­ய­மாக செயற்­பட முடி­யாது. மேலும் கடந்த காலத்­திலும் ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்பின் கூட்­ட­ணியில் இலங்­கையை சேர்ந்த நபர்கள் உள்­ள­தாக தக­வல்கள் வெளி­வந்­தன. இப்­போதும் புல­னாய்வு பிரிவின் தக­வல்களில் அவ்­வாறுள்­ள­தாக தெரி­விக்கப் படு­கின்­றது.  தேசிய பாது­காப்பை பல­ப­்படுத்த சகல அதி­கா­ரங்­க­ளையும் ஜனா­தி­பதி எமக்கு கொடுத்­துள்ளார்.

தேவை­யான சந்­தர்ப்­பத்தில் பாது­காப்பை பலப்­ப­டுத்தி நாட்டை பாது­காக்க சகல நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­படும் என்றார். 

 இது தொடர்பில் பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்­சி­யிடம் வின­வி­ய­போது,

இலங்­கையில் ஐ.எஸ்.  பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக சர்­வ­தேச நாடு­களின் புல­னாய்வு தக­வல்கள் எமக்கு கிடைத்­துள்­ளன.  பயங்­க­ர­வாத சூழலில் இருந்து விடு­பட்ட எமது நாட்டில் மீண்டும் எந்த வகை­யி­லேனும் அச்­சு­றுத்தல் ஏற்­ப­டு­வதை மக்கள் எவரும் விரும்­பப்­போ­வ­தில்லை. அதேபோல் எமது பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு பயங்­க­ர­வாத சூழல் தொடர்பில் அனு­பவம் உள்­ளது. ஆகவே நிலை­மை­களை சரி­யாக கையாள முடியும். 

 கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் இலங்­கையை சேர்ந்த 45 பேர் இர­க­சி­ய­மாக சிரி­யாவை சென்­ற­டைந்­துள்­ளனர். அவர்­களில் பலர் ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்பில் இணைந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் கிடைக்­க­பெற்­றன. 

அதில் இருந்து தொடர்ச்­சி­யாக ஐ.எஸ்.  பயங்­க­ர­வாத அமைப்பின் ஊடு­ருவல் இலங்­கையில் உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது. எவ்­வாறு இருப்­பினும் எமது பாது­காப்பு எப்­போதும் பல­மா­கவே இருக்கும் என அவர் குறிப்­பிட்டார்.

  இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜயனாத் ஜய­வீர தகவல் தரு­கையில் , 

மேற்­கத்­தேய மற்றும் மத்­திய கிழக்கு நாடு­களில் ஐ.எஸ். பயங்­க­ர­வாத செயற்பாடுகள் அதிகரித்து வருவதைப்போல தற்போது ஆசிய நாடுகளிலும் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருகின்றது. இப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இலங்கையில் அவ்வாறு எதுவும் அடையாளம் காணப்படவில்லை. 

எமது புலனாய்வுப் பிரிவினர் மிகவும் துல்லியமாக இந்த விடயங்கள் தொடர்பில் அவதானித்து வருகின்றனர். அது தவிர்ந்து எமது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலமாகவே உள்ளன என்றார்.  

8 கருத்துரைகள்:

உலக நாடுகளில் எங்கள்ல்லாம் இஸ்ரேவேளர்களின் சங்கமம் உள்ளதோ அங்கல்லாம் எதாதாவது ஒரு பயங்கர வாதாம் உருவாகும் அல்லது அவர்கள் உருவாக்கி விடுவார்கள் அல்லது உருவாக வழி வைப்பார்கள் இதுதான் உலக உண்மை இதை இலங்கை அரசாங்கம் நன்றாக புரிந்து உடனடியாக இஸ்ரவேல் தூதுவர் ஆலயத்தை வெளியேற்ற வேண்டும்.நாட்டில் வந்திருக்கும் சகல இஸ்ரவேலர்களையும் நாட்டை விட்டும் வெளியேற்ற வேண்டும் அப்போதுதான் இந்த இலங்கை மக்கள் எதிர் காலத்தில் நிம்மதியாக வால முடியும் என்பதை பாதுகாப்பு திணைக்களமும் அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

May Allah Protect SriLankan Muslims from THIS evil group that tries to destroy the purity of the TRUE Religion of GOD and Creating problem to Muslims around the world.

We also ask protection for Muslims from those racist groups who tries create problems to Srilankan Muslims finding falls claims.

I think RAW is in SL to monitor activities of ISIS in SL.
Hope USA will also assist SL.

As ling as MOSAD and Israel is in Sri lanka, we will be succeptible.

முஸ்லிம்களாகிய நாமும் இலங்கையில் இல்லை இல்லை என்ற சொல்லையே தொடர்ந்து பேசி வருவதும் நல்லதல்ல காரணம் இப்போது அதிகமான இளம் வயது வாலிபர்கள் சிநிமாத்துரைகளிலும்,மதுபான பாவனைகளிலும்,இன்னும் பல மோசமான துறைகளில் சிந்தனைகளை விட்டு மூளைச்சலவை சையப்பப்படுகிரார்கள் ஆகவே முஸ்லிம் சமுக தலைவர்கள் ஊர் நிருவாகிகள் உலமாக்கள் புத்தி ஜீவிகள் இதில் மிகவும் கவனம் சலுத்த வேண்டும்.நமக்கு என்ன என்ற போக்கில் இருந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.நபி ஸல் அவர்கள் சொன்ன முக்கியமான ஒரு ஹதீஸை நாம் எல்லோரும் மீட்டிப்பார்க்க வேண்டும்.கப்பலில் பிரயாணம் செய்த மேல் தட்டாரிடம் தண்ணீர் கேட்டு சிரமம் பண்ணாமல் கப்பலுக்கடியில் ஓட்டை போட்டு தண்ணீர் எடுக்கும் கீழ் தட்டார்களின் முயற்சியை மேல் தட்டார் கண்டு கொள்ளவில்லை என்றால் இரண்டு தட்டாரும் மூழ்கிப் போகும் அபாயம் பற்றிய ஹதீஸை நாம் எல்லோரும் மீட்டிப்பார்க்க வேண்டும்.

ISIS IS BASICALLY NOT AN ISLAMIC ARMED GROUP.RACISTS WHO TRY TO CREATE PROBLEMS WITH THE FUNDING AGENCIES BACKED BY NORWAY MUST BE ENLIGHTENED ENOUGH. THEN ONLY WE CAN MAKE THE NATIONAL INTEGRATION IN OUR COUNTRY.SHIA SECT IN SRILANKA PLAY BEHIND THE SCREEN BACKED BY IRAN AND ISRAEL.

Bullshit first take the fucking isreal jingos from Sri Lanka before Tamil no e Muslim why do they wanna putt our dick into their ads holes ha......Mr.Ajan Raw not working for them self JUST working for CIA in Asian region.

Post a Comment