Header Ads



4 வயது சிறுவனுக்கு 80 வயது முதியவர் தோற்றம்

வங்கதேசத்தில் 4 வயதாகும் சிறுவன் 80வயது முதியவர் போல் தோற்றமளிக்கிறான்.

தெற்கு வங்கதேசத்தின் மகுரா பகுதியைச் சேர்ந்தவர் ஹுசேன் (26). இவரது மனைவி திப்தி கேதன் (18). இத்தம்பதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு பயோஜித் ஷிக்தர் என்று பெயரிட்டுள்ளனர்.  இந்நிலையில் குழந்தை பிறக்கும் போதே கைகள், கால் போன்றவற்றின் தோல் சுறுங்கி முதுமை தோற்றத்துடன் பிறந்துள்ளது. அதோடு குழந்தைக்கு இதய நோய், பார்வை குறை பாடு, காது கேளாமை உள்ளிட்ட குறைபாடுகளும் உள்ளன.

இதையடுத்து சிறுவனை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவனது பெற்றோர் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தங்களது பூர்விக நிலத்தை விற்றிருக்கிறார்கள். ஆனாலும் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லையாம்.

இந்நிலையில் கடைசியாக தற்போது அந்த சிறுவனை டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள். இங்கு ஷிக்தரின் முதுமை நோய்க்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்க மருததுவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.