Header Ads



கட்டாரில் இருந்து 3 மாதத்துக்குள் வெளியேறலாம்..!

-கட்டாரிலிருந்து  Hidayathullah Ajmal-

கட்டார் நாட்டு உள்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ  முகநூல் பக்க செய்தியில் கட்டார் நாட்டில் தொழில் புரிவதட்காக வந்து பல்வேறு காரணங்களால் தத்தமது குடியிருப்பு அனுமதியினை (Residency Permit) புதுப்பித்துக் கொள்ளத் தவறிய சட்ட விரோத குடியிருப்பாளர்கள் எவ்வித சட்ட நடவடிக்கையும் இன்றி கட்டார்  நாட்டில் இருந்து வெளியேறிச் செல்வதட்கான பொது மன்னிப்பினை வழங்கவுள்ளதாக  கட்டார்  நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2016 செப்டம்பர் 1 முதல் 2016 டிசம்பர் 1 வரைக்குமான மூன்று மாதக் காலப் பகுதிக்குள் வெளியேறுவோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட  உள்ளதாக கட்டார்  நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

12 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறான பொதுமன்னிப்புக் காலம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது . 2004 ஆம் ஆண்டு கட்டாரின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 650,000 இருந்த பொழுது இவ்வாறானதொரு  பொதுமன்னிப்பினால் சுமார் 6,000 பேர் பயன் அடைந்தனர். எனினும், இவ்வருட ஏப்ரல் மாதக் கணக்கெடுப்பின் பிரகாரம் சுமார் 2,560,000 பேரைக் கொண்டதாக மொத்த சனத்தொகை காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  
மேட்குறிப்பிடப்பட்ட சட்ட விரோத குடியிருப்பாளார்கள் Search and Follow up Department  திணைக்களத்தினைத்  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.