Header Ads



260 பயணிகளின் உயிருடன், விளையாடிய இலங்கை விமானி..!

பலவந்தமான முறையில் 260 பயணிகளை அழைத்து செல்ல ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் விமானி முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் ஜேர்மன் பிராங்பேர்ட் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்ல தயாராக இருந்த விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமாக சென்றடைந்தது.

குறித்த விமானத்தை செலுத்த தயாராக இருந்த விமானி கடும் குடிபோதையில் இருந்தமையால் இந்த நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குடிபோதையில் இருந்த விமானி 260 பயணிகளின் உயிரை பயணம் வைத்து விமானத்தை ஓட்டுவதறகு முயற்சித்துள்ளார். UL554 என்ற விமானம் அன்றையதினம் மதியம் 1 மணியளவில் இலங்கை நோக்கி பயணிக்க ஆயத்தமாகியிருந்தது.

அது வரையில் விமானத்தின் பிரதான விமானியாக இருந்த குறித்த விமானி விமானத்தை ஓட்டுவதற்கு முடியாத அளவு மது போதையில் இருந்தமையால், விமானத்தின் துணை விமானிகளும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.

சூழ்நிலையை புரிந்து கொண்ட துணை விமானிகள்? சுகயீன விடுமுறை என கூறி விமானம் ஒட்டுவதனை புறக்கணிக்குமாறு பிரதான விமானியிடம் கோரியுள்ளனர். எனினும் 260 பயணிகளுடன் விமானத்தை பலவந்தமான ஓட்டுவதற்கு பிரதான விமானி முயற்சித்துள்ளார்.

அதற்கமைய அவர் துணை விமானிகளின் கோரிக்கையை கண்டுக் கொள்ளாமல் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து விமான நிலையத்தை நோக்கி சென்றுள்ளார்.

இதனையடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் கொழும்பு அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கு இருவரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக செயற்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையின் உயர் அதிகாரி, ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் உயிரை பாதுகாத்து விமானியை சோதனைக்குட்படுத்தினார்.

அங்கு அவர் சாதாரண அளவைவிடவும் அதிகமாக மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளதுடன் அவரால் விமானத்தை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் விமான சேவை நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக குறித்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Playing the fool with passengers' life

    ReplyDelete
  2. Its a small matter but pilots are always ♚ king

    ReplyDelete

Powered by Blogger.