Header Ads



ஒன்­றுக்கு மேல் ஹஜ் + உம்ரா செல்­வோ­ருக்கு, வீசா­ கட்ட­ணம் 2000 ரியால் - சவூதி அதிரடி


சவூ­தி அரே­பிய அர­சாங்கம் தனது நாட்­டுக்­கான வீசா கட்­டணங்களை மீள் நிர்­ணயம் செய்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

இதற்­க­மைய புனித ஹஜ் மற்றும் உம்ரா கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­க முதல் தட­வை­யாக செல்­வோ­ருக்கு மாத்­திரம் வீசா கட்டணம் இல­வ­ச­மாகும். ஒன்­றுக்கு மேற்­பட்ட தட­வைகள் ஹஜ் அல்லது உம்ரா கட­மைக்கு செல்வோர்

 ஒரு தட­வைக்கு 2000 சவூதி ரியால்­களை (78,000 ரூபா) வீசா கட்­ட­­ண­மாக செலுத்த வேண்டும் என அறிவிக்­கப்­பட்­டுள்­ளது. 

அத்­துடன் வெவ்­வேறு தேவை­க­­ளுக்­காக பல தட­வைகள் சவூ­தி­யினுள் பிர­­வே­சி­­ப்பவர்­க­­ளுக்­கான வீசா கட்­டணம் ஆறு மாதங்­க­­­ளுக்கு 3000 சவூதி ரியால்­க­ளா­கவும் ஒரு வரு­டத்­திற்கு 5000 சவூதி ரியால்­க­ளாகவும் இரண்டு வருடங்­க­ளுக்கு 8000 சவூதி ரியால்­க­ளா­கவும் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தினம் நடை­பெற்ற சவூதி அரே­பி­­யாவின் வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லேயே இந்தத் தீர்­மா­னங்கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­ன. எதிர்­வரும் முஹர்­ரம் மாதம் (2016 ஒக்­டோபர் 02) முதல்  மேற்படி மீள­மைக்­கப்­பட்ட வீசா கட்­ட­ணங்கள் நடை­மு­றைக்கு வரும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

சவூதி அரே­பியா பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகங்­­கொ­டுத்துள்ள நிலை­யில், எண்ணெய் வர்த்­த­கத்­துக்கு அப்­பாலான வரு­மா­ன­மீட்டும் வழி­மு­றைகள் தொடர்பில் தனது கவ­னத்தைச் செலுத்­தி­யுள்­ள­து.

இதற்­க­மை­வா­கவே சவூ­தியின் நிதி மற்றும் பொரு­ளா­தார திட்­ட­மிடல் அமைச்சின் சிபா­ரி­சு­க­ளுக்­க­மை­வாக அமைச்­ச­ரவை மேற்­படி தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டுள்­ள­து.

இதே­வேளை வீதி ஒழுங்­கு­களை மீறும் வாக­ன சார­தி­க­ளி­ட­மி­ருந்து அற­வி­டப்­படும் தண்டப் பண தொகை­யிலும் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 


2 comments:

  1. Pengal veedugalilirunthu irandu thadavaikku melaaga veliyey
    vanthaalum fine kattavendiya nilai vanthaalum viyappazatku
    onrumillai !Petrol and Gas illayenraal aduththa kattam
    Makkavai panam pannuvazuthaaney !Umra oru paththu thadavai
    seibavanukk izu oru pirachchinaiye alla .

    ReplyDelete
  2. Good decision. பணம் extra உள்ளதால் தானே மீண்டும் மீண்டும் செல்கிறார்கள். ஆகவே அவர்கள் கவலைப்பட தேவையில்லை.. என்ன உம்ரா என்ற பெயரில் பிஸ்னஸ் செய்யப்போகும் ஆசாமிகள் தான் கொஞ்சம் நச்சரிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.