Header Ads



1.36 டிர்லியன் ரூபா பணம் வௌிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது - ரணில்

கடந்த ஆட்சிக் காலத்தில் குறைந்தபட்சம் 1.36 டிர்லியன் ரூபா பணம் வௌிநாடுகளிலுள்ள, அரை அரச நிறுவனங்களின் கணக்குகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நாட்டின் மொத்த கடன் தொகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவால், நேற்று சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, இலங்கை பொருளாதாரத்திலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக, கூறிய பிரதமர், இந்த வருடம் மார்ச் 31ம் திகதி அளவில், இலங்கை வழங்கவிருத்த கடன் தொகை 8.77 டிர்லியன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும், இது குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய குழு, வழங்கும் அறிக்கைக்கு அமைய முழு கடன் தொகை தொடர்பில் சரியான கூற முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

யுத்தம் நிறைவடைந்த பின்னர் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் 9 வருடங்களுக்கு கடன் பெறப்பட்டுள்ளது. இதனால் அக் காலப் பகுதியில் அரசாங்கத்தின் கடன் தொகை மூன்று மடங்காக அதிகரித்து, 7.39 டிர்லியனான உயர்வடைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும் கடன் பெற்றமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை ராஜபக்ஷ அரசாங்கம் நிராகரித்துள்ளதோடு, அவை பெறப்பட்டது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவே எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.