Header Ads



ராஜபக்ஷ அரசாங்கம் இரகசியமாக பெற்ற, 1300 பில்லியன் ரூபா கடன் கண்டுபிடிப்பு

ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது, யாருக்கும் தெரியாமல் சர்வதேச நாடுகளிடமிருந்து, 1,300 பில்லியன் ரூபாய் கடனாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென்பது தொடர்பில்,  நிதியமமைச்சர் ரவி கருணாநாயக்க, ஆதாரங்களுடன் கண்டுபிடித்துள்ளார் என்று, அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறினார்.

'இவ்வாறு பெறப்பட்டுள்ள இரகசியக் கடன் தொகையையும் இந்த அரசாங்கமே செலுத்த வேண்டியுள்ளது' என, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இடம்பெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போது அவர் தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரபல ஹோட்டலொன்றின் இரண்டு மாடிகள், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கென அதிசொகுசு மாடிகளாக நிர்மாணிக்கப்பட்டு வந்தன. அந்த மாடிகளில், அனைத்து வசதிகள் காணப்படும் வகையிலேயே, அவை நிர்மாணிக்கப்பட்டு வந்தன' என்றார்.

'இப்படியானவர்கள் தான், இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டுமென்று கூறிக்கொண்டு பாதயாத்திரை செய்கிறார்கள். ராஜபக்ஷக்களால் நட்டத்தை மாத்திரமே சம்பாதித்தவர்கள், இன்று நன்மையடைந்து வருகின்றனர்.

இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான அரையாண்டு காலப்பகுதியில், வரி அறவீடு மூலம் ஆயிரம் பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்று, அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.

ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தின் போது, வரி அறவிடப்படாத வகையில் கள்ளப் பாதைகளினூடாக
பொருட்கள் கொண்டுவரப்பட்டன. இதனால், வரி வருமானமொன்று கிடைக்கவில்லை. ஆனால், முறையாக வரி அறிவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால், அரசாங்கத்துக்கு ஆயிரம் பில்லியன் ரூபாய் வரி வருமானம் கிடைத்துள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.

2 comments:

  1. கண்டு பீடித்தால் பிடித்து உள்ளே போட்டு தட்ட வேண்டிய இடத்தில் தட்டி பணம் இருக்கும் இடத்தை காட்டச்சொல்லி பணத்தை நாட்டுக்கு கொண்டுவந்து திறை சேரியில் சேர்த்து மக்களின் சுமையை கொஞ்சம் குறைங்கள்,பாமர மக்கள் யாராவது50 100.களவாடினால் அல்லது சந்தேகப்பட்டால் அவன் வாழ்க்கையில் எழுந்து இருக்க முடியாத அளவுக்கு கால்கையை உடைத்து போடுவீர்கள் பாமரன் பசியின் கொடுமையால் செய்தால் களவு கொள்ளை.ஆனால் இவர்கள் செய்தால் மோசடி என்று பெயர் அவர்களுக்கு தனி பாதுகாப்பு எவனாக இருந்தாலும் கள்ளன் கள்ளன்தான் ,

    ReplyDelete

Powered by Blogger.