August 17, 2016

இலங்கையில் முஸ்லிம்களின் திரு­மண வய­தெல்லை 12 லிருந்து 18 ஆக உயருகிறது

-விடிவெள்ளி  ARA.Fareel-

நாட்டில் அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் பல திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

இச்­சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்கு கடந்த கால அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட குழு தனது சிபா­ரி­சு­களை விரைவில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக்ஷவிடம் கைய­ளிக்­க­வுள்­ளது.

பல­தார மணம், முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை, விவா­க­ரத்தின் போது பெண்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய மத்தாஹ் (நஷ்­ட­ஈடு) தாபரிப்புப் பணம் போன்ற விட­யங்கள் உட்­பட பல திருத்­தங்­களை குறிப்­பிட்ட குழு சிபா­ரிசு செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 12 லிருந்து 18 ஆக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

பல­தார மணத்­திலும் சில கட்­டுப்­பா­டுகள் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளன. விவா­க­ரத்­தின்­போது கணவர் மனை­விக்கு நஷ்­ட­ஈடு வழங்க வேண்டும் என்­பதும் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது.

தாப­ரிப்பு தொடர்­பாக நிதி­ய­மொன்­றினை நிறு­வு­வ­தற்கும் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த நிதியம் நீதி­ய­மைச்சின் கீழ் அமைய வேண்­டு­மென ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கென ஒரு குழுவும் நிய­மிக்­கப்­படும்.

அக் குழுவின் உறுப்­பி­னர்­க­ளாக நீதி­ய­மைச்சின் செய­லாளர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் உட்­பட ஐவர் உள்­ள­டங்­கி­யி­ருப்பர்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் ஆராய்ந்து சிபா­ரி­சு­களைச் செய்­வ­தற்கு கடந்த கால அர­சாங்­கத்­தினால் தற்­போது ஓய்­வு­பெற்­றி­ருக்கும் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது.

குழுவில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­திகள், சட்­டத்­த­ர­ணிகள், சிவில் சமூகப் பிர­தி­நி­திகள், முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிர­தி­நி­திகள் என்போர் அங்கம் பெற்­றுள்­ளனர். இக்­குழு பொது மக்­க­ளி­ட­மி­ருந்து ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்­னணி காதி நீதி­ப­தி­க­ளாக பெண்­களும் நிய­மிக்­கப்­பட வேண்டும் என கோரிக்கை விடுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது என்­றாலும் உலமா சபை இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

குழுவின் சிபாரிசுகள் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டதும் நீதியமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றதன் பின்பே சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

5 கருத்துரைகள்:

May Allah Protect the Muslim members of this group from violating the SHAREEA knowingly or without knowledge.

No one has the right to change the Permission of Allah in any issue. Especially any Muslim who tries to put his opinion over the decision of Allah.. May Allah put him down and Protect the true Muslims from this evils, who tries to compromise the DEEN for the sake of KUFFARS will.

If the reformations are according to the teachings of the Holy Qur'an and the Tradions of the Prophet it is most welcome othervise they will earn the wrath of Allah which will lead them to His punishment. May Allah guide all of us in the straight path. Ameen.

Welcome...do changes as quick as possible to protect the Muslim women from the misuse of men.

எழு வானங்களுக்கு மேலால் இருந்து அல்லாஹ் அறிவித்து / வழிகாட்டிக் கொடுக்கமளுக்கு நபி சள்ளல்லாஹு அலைஹிவசள்ளம் எதையும் செய்ததாகவோ, சட்டமாக்கியதாகவோ, மற்ற மனிதர்களுக்கு ஏவியதாகவோ இந்த மார்க்கத்திலை எங்கேயும் இல்லை. யார் நபியிட சுன்னவுடனும், ஷரியா சட்டங்களுடனும் தங்களின் புத்தியை பாவித்து மாற்றம் செய்கின்றார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கும் மேலாக தங்களுக்கு புத்தி வந்துவிட்டது என்று சொல்ல வருகின்றார்களா?

இருந்த சட்டமும் பிழை, வந்துகொண்டு இருக்கிற சட்டமும் பிழை. ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் சஹீகாண புகாரி அறிவுப்பு ஆறு வயசு என்றால், அதை மாற்றி சட்டம் போட யாருக்கும் உரிமை இல்லை. எது எதுக்கோ எல்லாம் போராடுகின்ற முஸ்லிம் சமூகம், அல்லாஹ்வின் வழிகாட்டலில் (ஜிப்ரில் அலைச்சலாம் தட்டில் கொண்டுவந்து காட்டிய_) அந்த திருமணத்தின் வயதை மாற்றுகின்றார்களோ, அதுக்கு எதிராக குரல் கொடுத்து, அல்லாஹ்வின் சட்டம் அல்லாத சட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல தயார் இல்லாதது கடும் கவலையானது.

தலாக் சொன்னால், இஸ்லாமிய சட்டத்தில் ஜீவனாம்சம் இல்லை, ரிஸ்க் கொடுப்பவன் ரப்பு, ஆக தலாக் சொல்லிவிட்ட கணவனிடம் பணம் கேட்கவோ, குடுக்கும் படி சொல்லவோ முடியாது.
அல்லாஹ் அவனது கோவப் பார்வை எம்மக்கள் மீது இறங்காமல் பாதுகாக்க வேண்டும், இனியும் தாமதம் செய்யாமல் சத்தியத்தை சரியாக சொல்லி, அதை பாதுகாருங்கள்.

காலம் காலமாக அனுபவிக்கும் குர்ஆனிய அடிப்படையான முஸ்லிம் தனியார் சட்டம் இலங்கை முஸ்லிம்களின் அதி பெறுமதிவாய்ந்த சொத்தாகும்.

Post a Comment