Header Ads



ஷகீப் கொலை, 11 பொலிஸ் குழுக்கள் களத்தில், கொள்ளுபிட்டி - தெஹிவளை வரை சீ.சீ.ரி.வி. சோதனை


பம்பலபிட்டி , கொத்தலாவல எவனியூ பகுதியில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் மாவனல்லையில் வைத்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோடீஸ்வர  வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் கடத்தல் மற்றும் படுகொலைக்கு 40 மில்லியனுக்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதா என பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பில் வெள்ளவத்தை பிரதேசத்தின் பிலபல வர்த்தகர் ஒருவரிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நாடத்தி வருவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இவரை விட வெள்ளவத்தை பகுதியின் மேலும் இரு வர்த்தகர்களிடமும் பொலிஸார் விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதாக குறித்த உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இதனை விட மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுபிட்டியில் இருந்து தெஹிவளை வரையிலான அனைத்து சீ.சீ.ரி.வி. கமராக்களையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ள விசாரணையாளர்கள் அது தொடர்பில் பிரத்தியேகமாக மூன்று பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதன்படி மொத்தமாக இவ்விசாரணைகளுக்கு என 11 பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2 comments:

  1. CCTV CAMERA records are not clear. And also some of the evidence are unfortunately missed in locker. This is what will be happen.

    ReplyDelete
  2. There is no hard and fast rule in this country. The death penalty must be enforced right away to hang all the culprits. Till such this nation is in curse.

    ReplyDelete

Powered by Blogger.