Header Ads



வெளிநாடுகளில் இருக்கும் போது, புர்கா அணியவேண்டாம் - UAE

-BBC-

வெளிநாடுகளில் இருக்கும் போது பாரம்பரிய உடையை அணிய வேண்டாமென்று ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.

வெள்ளை அங்கி மற்றும் தலையை மறைத்தபடி துணி அணிந்திருந்த அமீரக தொழிலதிபர் ஒருவரை தரையில் தள்ளி அமெரிக்காவின் ஒஹையோ மாகாண போலிஸ் கைது செய்தது.

விடுதி ஊழியர் ஒருவர் அவருக்கு தீவிரவாத தொடர்புகள் இருக்கும் என சந்தேகித்துள்ளார்.

முகத்தை மறைக்கும் திரைகளுக்குத் தடை இருக்கும் சில ஐரோப்பிய நாடுகளில் அது போன்ற திரையை அணிய வேண்டாம் என்று பெண்களுக்கு ஐக்கிய அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

15 comments:

  1. புன்னகை புரிவது, இன்முகம் காட்டுவது தர்மமும் நபி வழியும் என நம்புகிறேன். முகத்தினை மறைப்பதால் இது எவ்வாறு சாத்தியமாகும்? பார்வையை தாழ்த்துவதல்லவா இறை ஏவல்?

    ReplyDelete
  2. அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்ட ஒரு விடயத்தில் தனது கணவனுக்கே உரிமையில்லாத போது ஒரு அரசாங்கம் எப்படி தலையிடும்

    ReplyDelete
  3. Mr unknown குர்ஆனில் எங்கே அப்படியான கட்டலை இருக்கிறது? பெரியார்களே சகோதர்களே

    ReplyDelete
  4. மஹிபால் அவர்களே,
    மஹ்ரமில்லாத ஒருத்தனோட
    உங்கட மனைவியோ, தாயோ, சகோதரியோ புன்னகை பூத்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
    அப்படியாயின் உங்களுக்கு சூடு, சொரணை இல்லையென்பதுதான் அர்த்தம்.
    எல்லாவற்றுக்கும் கற்பனையில் விளக்கம் கொடுக்கப் போகாதீர்!

    ReplyDelete
  5. Fassy
    ஆணும் ஆணும் தாராளமாக புன்னகை புரியலாம். ஏனெனில் ஆண்கள் முகத்தை மூடுவதில்லை. பெண்ணும் பெண்ணும் தாராளமாக புன்னகை புரியலாம். ஏனெனில் பெண்கள் பெண்களுக்கிடையே முகத்தை மூடத்தேவையில்லை. நீங்கள் கேட்டது ஆணும் பெண்ணும் புன்னகை புரிவதைப் பற்றியா?

    ReplyDelete
    Replies
    1. ஆம், சகோதரரே! அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

      Delete
  6. கட்டளை இடப்பட்டது நபிகளாரின் மனைவியருக்கு, உங்களுக்கல்ல.

    ReplyDelete
  7. ஒரு பெண் தனது மஹ்ரமியான ஆணுடன் புன்னகை புரிவது, இன்முகம் காட்டுவது தர்மமாகும். ஒரு பெண் தனது அஜ்னபியான ஆணுடன் புன்னகை புரிவது, இன்முகம் காட்டுவது அதர்மமாகும்.

    ReplyDelete
  8. Replies
    1. இருந்தாலும், முகம் மூடிய பெண்கள் வெளியே செல்லும்போது எதிர்ப்படும் முஸ்லிமான மற்றும் இதர பெண்களோடு புன் முறுவல் பூக்கவும் இன்முகம் காட்டவும் ஸலாம் உரைக்கவும் அது தடையாக இருப்பது இஸ்லாத்தைப் பற்றிய நல்லெண்ணம் இதர மக்களிடத்து ஏற்படாமல் இருக்கவும் அது காரணமாகலாம். ஆகவே, அத்தியாவசியம் அன்றி அவ்வாறான பயணங்களைத் தவிர்த்தல் நலம் எனக் கருதுகிறேன்.

      Delete
  9. முதலில் பெருநாள் வாழ்த்துக்கள் சகோரதரரே. தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்.

    1.முகம் மூடிய பெண்கள் மட்டுமல்ல, திறந்த பெண்களும் கூட அத்தியவசியம் அன்றி பயணங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    2.முகம் மூடிய பெண்களைப் பார்த்து எத்தனையோ பெண்கள் இஸ்லாத்திற்கு வந்த சம்பவங்கள் உண்டு.

    3.வீதியில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் நடமாடுவர். அதனால் வீதியில் பெண்கள் கதைத்துக் கொண்டு நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

    4.முகம் மூடிய பெண்கள் வீதியில் செல்லும்போது வேறு பெண்களுடன் கதைக்க நேரிட்டால் முகத்தைத் திறந்து கதைக்க, ஸலாம் சொல்ல முடியும். எந்தத் தடையும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்! நன்றி.

      Delete
  10. முகத்தை மூடிக்கொண்டு ஆடையை மிகவும் இறுக்கமாக அணிந்து கொள்வர். இதற்கு என்ன பெயரோ தெரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.