Header Ads



மின்சாரக் கட்டணப் பட்டியலுக்குப் பதிலாக Smart meter முறை

மின்சாரக் கட்டணப் பட்டியலுக்குப் பதிலாக Smart meter முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா கூறுகிறார்.

மின்சாரக் கட்டணப் பட்டியல் அதிகாரிகளின் 24வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன் காரணமாக மின்சாரக் கட்டணப் பட்டியல் அதிகாரிகளின் பதவி மற்றும் சங்கத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும் மின் நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் என பெயரிடப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இதனை மிகக்குறுகிய காலத்திற்குள் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

இந்த Smart meter கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்படுவது மிகவும் இலாபமானது என்றும், அவற்றை இலங்கையில் தயாரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் இதன் அறிமுகத்தால் எவரும் தொழில் இழக்க நேரிடாது என்றும் கூறினார்.

கடந்த காலத்தில் மின்சார சபை பல சவால்களுக்கு முகங்கொடுத்திருந்ததாகவும், எனினும் அதனை சிறந்த அரச நிறுவனமாக மாற்றியமைப்பது நமது நோக்கம் என்றும் பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா கூறுகிறார்.

No comments

Powered by Blogger.