Header Ads



இரவு இரவாக சந்திப்பு - SLFP வெடிப்பு நிச்சயமாகிறது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ள புதிய தேசிய அரசியல் அமைப்பு காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்டிப்பாக இரண்டாக பிளவுப்படும் என மைத்திரி தரப்பினர் இடையில் நடந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு அமைச்சர் மகிந்த அமரவீரவின் வீட்டில் நடந்துள்ளது.

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகிய அமைச்சர்களும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் தர்மசிறி ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் ஆலோசரும் இணைப்புச் செயலாளருமான ஷிரால் லக்திலக்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பு முதல் நாள் இரவு ஆரம்பித்து மறுநாள் விடியும் வரை நடைபெற்றுள்ளது.

மகிந்தவின் புதிய அமைப்பு எதிராக எடுக்க போகும் அரசியல் செயற்பாடுகள் என்ன என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் எதிர்ப்புகள் இருந்தாலும் அரசாங்கத்தை பாதுகாத்து கொண்டு கட்சியினரை பாதுகாப்பது சிரமமானது எனவும் இதன் போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.