July 27, 2016

தென்கிழக்கு மாகாணத்திற்கு ஆதரவானவர்களை எதிரியாகவும், துரோகியாகவும் பார்ப்போம் - கோடீஸ்வரன் Mp

வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சியில் அம்பாறை மாவட்டத்தை புறந்தள்ளி எடுக்கப்படும் எந்ததீர்வுக்கும் அம்பாறைத்தமிழர்கள் உடன்படமாட்டார்கள். அப்படி எதாவது நடந்தால் அதற்கெதிராக போராடவும் தயங்கமாட்டோம் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் எந்நேரமும் விழிப்பாயிருக்கவேண்டும். இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன்  காரைதீவு  விபுலானந்த மகா வித்தியாலய  தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வுகூடத்தின் மொழியியல் பிரிவைத் திறந்துவைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.

இத்திறப்புவிழா  கல்லூரி அதிபர் தி. வித்யாராஜன் தலைமையில் இடம்பெற்றது. அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்: 

நாட்டில் எடுக்கப்படும் எந்த தீர்வும் அம்பாறைமாவட்ட தமிழர்க்கு எதிராக எடுக்கப்படுமானால் அதற்கெதிராக வீதியில் இறங்கிப் போராடத் தயங்கமாட்டோம். எதிரானவர்களை எதிர்ப்போம்!

அம்பாறைமாவட்ட தமிழர்க்கெதிரான தீர்வுத்திட்டத்தை ஆட்சியாளரோ எந்தகட்சியோ எந்த தலைவர்களோ முன்னெடுத்தாலும் அதனை வன்மையாக எதிர்ப்போம். அம்பாறை மாவட்ட தமிழர்கள் இதுவரை அனுபவித்து வந்த அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் பாரபட்சங்கள் அநீதிகள் துன்பதுயரங்கள் வேதனைகள் இழப்புகள் எண்ணிலடங்காதவை.

அம்பாறைத் தமிழர்க்கான பிரச்சினைகளை அம்பாறை மாவட்டத் தமிழரே அறிவார்.

ஓற்றுமை பற்றி மேடைகளில் வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால் செயற்பாடுகளில் தன்னிச்சையாக நடந்துகொள்வார்கள். இவர்களை இனியும் நாம் நம்பத்தயாரில்லை. அவர்களை நம்புவர்களையும் நாம் நம்பத்தயாரில்லை என்ற செய்தியை இங்கு பகிரங்கமாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

அம்பாறைத் தமிழ் மக்களை புறக்கணித்து எடுக்கப்படும் தீர்மானத்திற்கெதிராகவும் அணிதிரள்வோம். எந்த அரசியல்கட்சித்  தலைவரானாலும் சரி எந்தக் கொம்பனென்றாலும் சரி அவருக்கெதிராக போர்க்கொடி தூக்குவோம்.

அம்பாறை கரையோர மாவட்டத்தை தமிழ்மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனை தென் அலகாக உள்ளடக்கப்படுவதனையும் நாம் வன்மையாக எதிர்ப்போம். இதற்காதரவாக எமது எந்த அரசியல்வாதியானாலும் சரி புத்திஜீவியானாலும் சரி எமது எதிர்ப்பைத் தெரிவிப்போம். எதிரியாகப் பார்ப்போம். துரோகியாகப் பார்ப்போம்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மட்டக்களப்பிலுள்ள திருமலையிலுள்ள யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்களுடன் இரண்டறக்கலந்து வாழவே விரும்புகின்றனர். இது ஆண்ட பரம்பரை.

வடக்கு கிழக்கில் மூன்றாவது சிறுபான்மையினமாக தமிழர்கள் வாழ்வது அம்பாறை மாவட்டத்திலாகும். அதற்காக அவர்களை யாராவது புறந்தள்ள நினைத்தால் எந்தக்கட்சியானாலும் எந்த தலைவரானாலும் அவர்களை தூக்கிவீசுவோம்.

அம்பாறை மாவட்டத்தில் ஒலு இலட்சத்து 40ஆயிரம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை புறந்தள்ளி எந்த தீர்வையும் எந்தக் கட்சியும் முன்னெடுக்க விடமாட்டோம்.

எமது மக்களின் உரிமைகள்  காணிகள் பொருளாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கல்விக்கான சுகாதாரத்திற்கான ஒதுக்கீடுகள் சமத்துவமாகப்பெறப்பட வேண்டும். ஆனால் இவற்றைத் திட்டமிட்டு முடக்க ஒருசாரார் திரை மறைவில் சதிமுயற்சிகளில் ஈடுபட்டுவருவதை நாமறிவோம் என்றார்.

5 கருத்துரைகள்:

முஸ்லிம் தலைவர்களை குறிவைக்கிறார்

மானம் ரோஷமுள்ள முஸ்லீம் அரசியல்வாதிகளே வடக்கு கிழக்கு இணைந்தால் போராட்டத்திற்கு தயார் என்று இந்த இனவெறியனை போன்று ஒரு அறிக்கைவிட உங்களுக்கெல்லாம் முதுகெலும்பில்லையா? கிழக்கு முஸ்லிம்களே விழித்துக்கொள்வோம் எம் மண்ணையும் உரிமையையும் பாதுகாக்க அரசியல்வாதிகளை நம்பாது வீதிக்கு இறங்கி போராடுவோம்.

கரையோரமாவட்டம் கொடுக்க முடியாது என்கின்றவன் வெட்கமின்றி முஸ்லீம் பிரதேசங்களை வடக்கோடு இணைக்ககூற என்ன அறுகதையுண்டு? சிங்களவரோடு இனைந்து வடகிழக்கு இணைப்பிற்கு எதிராக போராட தயாராவோம்

ஐயா கோடீஸ்வரன் அவர்களே,
நீங்கள் அரசியலுக்குப் புதியவர்; அரசியல் சாணக்கிணம் உங்களிடம் கிடையாது. துவேஷம் பேசுகிறீர்! ஆனால், சகோதரர் ஹரீஸ் அரசியலில் பழுத்த கனி! கிழக்கு வாழ் முஸ்லிம்கள் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் பட்ட, படுகின்ற துன்ப துயரங்களை அறிந்தவர்.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை நீங்கள் நேசிப்பது போன்று அதே மாவட்ட முஸ்லிம் மக்களைப் பற்றி சகோதரர் ஹரீஸ் சிந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது? உங்களுக்கு ஈழம் போன்ற ஒன்றைக் கேட்க முடியுமாக இருந்தால் சகோதரர் ஹரீஹுக்கு கரையோர மாவட்டத்தைக் கேட்க அருகதை இல்லையா? இது தூர நோக்குச் சிந்தனை என்பதை உணருங்கள்! வடக்கும் கிழக்கும் ஒன்றாய் இருந்தபோது முஸ்லிம்கள் என்ன பாடு பட்டார்கள். மறந்து விட்டீர்களா? அதர்க்கம் பேச வேண்டாம்! குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம்! அம்பாறை மாவட்ட முஸ்லிம்களும் இந்த நாட்டின் பிரஜைகள்தான்! வந்தேறுகுடிகளல்லர்! முஸ்லிம்களது விகிதாசாரம் பாதாளத்தை நோக்கிச் சென்றதை மறந்து விடாதீர்கள்.

பரவாயில்லை போட்ட வாக்கு வீணாகவில்லை

Post a Comment