Header Ads



"பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில், சட்டம் ஒரு­த­லைப்­பட்­ச­மா­கவே அமுல் நடாத்­தப்­பட்­டுள்­ளது"


-ARA.Fareel-

தெஹி­வளை –பாத்யா மாவத்தை பள்­ளி­வா­சலின் கட்­டட நிர்­மா­ணத்­திற்­காக தெஹி­வளை –கல்­கிசை மாந­கர சபை­யினால் வழங்­கப்­பட்­டி­ருந்த கட்­டட நிர்­மாண அனு­மதிப் பத்­தி­ரத்­தினை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை இரத்துச் செய்­துள்­ள­மைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. 

பாத்யா மாவத்தை பௌசுல் அக்பர் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை இந்த வழக்­கினை தாக்கல் செய்ய தீர்­மா­னித்­துள்­ளது. பிர­தி­வா­தி­க­ளாக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் பணிப்­பாளர் நாயகம் எஸ்.எஸ். பி.ரத்­நா­யக்க மற்றும் தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை ஆணை­யாளர் தம்­மிக்க முத்­து­கல ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர். 

இது தொடர்பில் கொழும்பு மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்தின் செய­லாளர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் கருத்து தெரி­விக்­கையில் 'பாரிய நகரம் மற்றும் மேற்­கா­சிய அபி­வி­ருத்தி அமைச்சில் பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் கட்­டட நிர்­மாணம் தொடர்­பான பிரச்­சினை ஆரா­யப்­பட்­டுள்­ளது. 

அங்கு நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தைக்கு பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக முறை­ப்பாடு செய்­த­வர்கள் மாத்­தி­ரமே அழைக்­கப்­பட்டு கலந்­து­ரை­யாடல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இந்தப் பேச்­சு­வார்த்­தையின் பின்பே பள்­ளி­வா­சலின் நிர்­மாணப் பணிக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த கட்­டட அனு­மதிப் பத்­தி­ரத்தை இரத்துச் செய்­வ­தெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இது ஒரு தலைப்­பட்ச கலந்­து­ரை­யா­ட­லாகும்.

பேச்­சு­வார்த்­தைக்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் அழைக்­கப்­பட்டு அவர்கள் பக்க நியா­யங்­களும் கவ­னத்திற் கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும்.

இந்த அனு­ம­திப்­பத்­திர இரத்து அறி­வித்தல் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் பணிப்­பாளர் நாய­கத்­தினால் தெஹி­வளை –கல்­கிசை மாந­கர சபை ஆணை­யா­ள­ருக்கு அறி­விக்­கப்­பட்டு அந்த அறி­வித்­தலின் பிர­தி­யொன்றே பௌசுல் அக்பர் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திற்கு அனுப்­பி­வைக்கப் பட்­டுள்­ளது.

இந்த அறி­வித்தல் நேர­டி­யாக பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். 

சட்டம் அனை­வ­ருக்கும் பொது­வா­ன­தாக இருக்க வேண்டும் பௌசுல் அக்பர் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் சட்டம் ஒரு­த­லைப்­பட்­ச­மா­கவே அமுல் நடாத்­தப்­பட்­டுள்­ளது. பாத்யா மாவத்­தையில் சமய ஸ்தலமே நிறு­வப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் கரு­ணையும் சமா­தா­னமும் நல்­லி­ணக்­க­முமே போதிக்­கப்­ப­டு­கி­றது. மக்கள் அங்கு நல் வழிப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள். எனவே கட்­டட நிர்­மாணப் பணிக்­காக வழங்­கப்­பட்ட அனு­மதிப் பத்­திரம் இரத்துச் செய்­யப்­பட்­ட­மைக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது என்றார். 

தெஹி­வளை கல்­கிசை பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் எம்.யூசூபை 'விடி­வெள்ளி' தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது. 'நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை எடுத்­துள்ள தீர்­மானம் ஒரு தலைப்­பட்­ச­மாகும்.

எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடாத்­தப்­ப­டாது பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக குரல் கொடுப்­ப­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி தீர்­மானம் மேற்­கொண்­டுள்­ளமை ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மா­னது என்றார். 

வீடொன்­றுக்குள் பள்­ளி­வா­ச­லொன்று இயக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக பிர­தேச மக்கள் செய்த முறைப்பாடு தொடர்பில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை அதி­கா­ரிகள் மேற்­கொண்ட பரி­சோ­த­னை­களின் போது அது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சமயப் பாட­சா­லை­யொன்­றுக்­கான கட்­டட நிர்மாண அனுமதி வழங்கப்பட்டுள்ள கோவையும் பரிசீலனை செய்யப்பட்ட பின்பே அந்த அனுமதியை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தை மேற்கொண்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெஹிவளை –கல்கிசை மாநகர சபையின் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள 2016.06.29 ஆம் திகதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதியே பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. இதுதான் நல்லாட்சி! இதில் அராஜகம் நடந்தாலும் நல்லாட்சி அரசாங்கம் பார்த்துக்கொண்டுதான் இருக்கும். அதில் தலையிடாது. மஹிந்த open ஆக விளையாடினான்: மைத்தியும் ரணிலும் தண்ணீருக்குக் கீழால் வெடில் வைக்கிறார்கள்! வாழ்க ஜனநாயகம்!

    ReplyDelete
  2. Wait and see more of Yahapalanaya

    ReplyDelete
  3. As a Long term solution – What is needed is that, INSHA ALLAH – all the Jummah Mosques, Muslim Ministers, Muslim Parliamentarians, Muslim Civil Society Groups, Muslim Religious Organizations, Mosque Alliances, Muslim Academics, Muslim Intellectuals and Muslim politicians should formulate a memorandum to be presented to the Minister of Muslim Cultural Affairs REQUESTING the Minister to SUBMIT a CABINET PAPER REQUESTING PARLIAMENT TO AUTHORIZE SRI LANKA MUSLIMS TO HAVE THE RIGHT TO CONSTRUCT THEIR PLACES OF WORSHIP ADHERING TO THE CIVIL AND ADMINISTRATIVE LAWS AND REGULATIONS OF SRI LANKA AS SPECIFIED WITHIN THE CONSTITUTION. What Minister Sagala Ratnayake, PM. Ranil Wickremesinghe, Yahapalana Muslim Ministers Rauf Hakeem, Rishad Bathiudeen, Faizer Musthapa and MP’s, Mujeebu Rahuman and the loud mouthed Azad Sally and The Muslim Council of Sri Lanka had stated “was pure bluffing the Bahatiya Mawatha Jamath. “The Muslim Voice” predicted this situation – Alhamdulillah. “The Muslim Voice” told the outcome of the Bathiya Street Mosque issue and how things will turn out in many of our COMMENTS in this website – Alhamdulillah. A full report with facts on the real situation and how to approach a resolution was presented by “The Muslim Voice” in this website/forum - http://www.jaffnamuslim.com/2016/06/blog-post_744.html
    Dated 27.06.2016. Browsing http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_874.html will also enlighten more.
    The Muslims should also call for the “promised Hate Speech Bill” to be enacted soon. If there are NO such laws in the present Constitution, then, under the proposed Constitutional Reforms, such laws have to be enacted/written under the “SECTION OF RIGHTS as “RELIGIOUS RIGHTS”. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any above challenges politically through RIGHTFUL legislations adopted in our favour in the coming future, Insha Allah. It is suggested that Muslims like (Brother) Az-Sheikh A.C. Agar Mohamed (Naleemi) as a Muslim Scholar and an Academic and Senior Tamil Journalist (Brother) A.S. Siddique Karriapper of Sainthamaruthu should come forward to lead this NEW POLITICAL FORCE, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.