Header Ads



இலங்கையில் காஷ்மீருக்கு ஆதரவாக, ஆர்ப்பாட்டம் செய்தமைக்கு இந்தியா எதிர்ப்பு


சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த வாரம் கொழும்பிலுள்ள ஐ.நா பணியகம் முன்பாக, இந்திய அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளது.

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்துலக ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்திருந்தன.

காஷ்மீரில், மனித உரிமைகள் மீறப்படுவதாக, கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக பாகிஸ்தானியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விவகாரத்தை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் கொண்டு செல்லவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2 comments:

  1. உண்மையில் இலங்கையிலுள்ள முஸ்லீம் மக்களும் கட்சிகளுமே இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியிருக்கவேண்டும். சகோதர முஸ்லீம் மக்கள் அயல்நாட்டில் கொடுமைப்படுத்தப்படும்போது மௌனமாகவிருந்தால் நாளை இந்த நாட்டில் முஸ்லீம்களிற்கு பிரச்சனை வரும்போது அயலிருந்து யாரும் உதவிக்கு வரமாட்டார்கள். தொலைவிலிருக்கும் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சிறுபகுதியினைக்கூட காஸ்மீரிற்கு கொடுக்கவில்லையே. ஏன் காஸ்மீர் பிரச்சனையினைப் பேசினால் அரபு நாடுகளிடமிருந்து காசு வராது என்பது காரணமா . இப் பிரச்சனைக்காக மனிதர்கள் எல்லாருமே குரல் கொடுக்கவேண்டும்.

    ReplyDelete
  2. Athu unmaye manitha urimai indiyavil meerappatukintrana thuvesa pitithavan thalaivar rss inudaya oru alum kooda inavaathiya arasiyal seyyavayythaal ippadithan nadakkum enpathai nantraka modi kaattikkonturukkintrar ippadi yang thalaivareal iruppathu naattI paathaalutthukku ittusellum.

    ReplyDelete

Powered by Blogger.