Header Ads



முஸ்லீம்களை பாதுகாக்க, உறுதி பூண்டுள்ளேன் - பெருநாள் வாழ்த்தில் ஒபாமா

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ள அதிபர் பராக் ஒபமா, அமெரிக்க வாழ் முஸ்லீம்களை பாதுகாக்க மீண்டும் உறுதி பூண்டுள்ளதாக கூறினார்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அமெரிக்க வாழ் முஸ்லீம்களை பாதுகாக்க மீண்டும் உறுதி பூண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஒபாமா கூறியுள்ளதாவது:-

கடந்த ஒரு மாதம் நம்முடைய நாடு மட்டுமல்லாது உலகத்தின் பல பகுதிகள் அறிவற்ற வன்முறை சம்பவங்களால் பாதிப்படைந்துள்ளது. ரமலான் மாதத்தில் ஓர்லந்து, இஸ்தான்புல், டாக்கா, பாக்தாத் மற்றும் மதினா ஆகிய இடங்களில் நடைபெற்ற அத்தகைய சம்பவங்களில் உயிரிழந்தோருக்காக நாம் பிராத்தனை செய்வோம். 

அமெரிக்கா முழுவதும் வாழும் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பண்டிகை 30 நாட்கள் நோன்பினை நினைவு கூர்வதற்கு நல்ல வாய்ப்பு. அதேபோல், அமெரிக்க வாழ் முஸ்லீம்களை பாதுகாக்க மீண்டும் உறுதி பூண்டுள்ளோம். 

நம்முடைய நாட்டில் அமெரிக்க முஸ்லீகளுக்கு எதிராக தாக்குதல்கள் எழுந்துள்ளதை பார்த்திருக்கிறோம். வழிப்பாட்டு தலங்களில் பாதுகாப்பு இல்லை என்று கருதி யாரும் பயப்படக் கூடாது. 

அமெரிக்கா உருவானதில் இருந்து முஸ்லீம்கள் நம்முடைய நாட்டினர் குடும்பத்தினர் அவர்கள். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.