Header Ads



சந்திரிக்காவின் மத்தியஸ்தம், மைத்திரி - ரணில் முரணப்பாடு தீர்ந்தது

இலங்கையில் மத்திய வங்கிக்கான புதிய ஆளுநர் தெரிவு செய்யப்பட்டமையை அடுத்து புதிய ஆளுநர் விடயத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நிலவியதாக கூறப்படும் முரண்பாடு தீர்ந்துள்ளதாக செய்தி இணையம்; ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் இருவரும் இந்த விடயத்தில் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டதாக குறித்த செய்தி இணையம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று இன்னும் சில மணித்தியாலங்களில் மத்திய வங்கிக்கான புதியஆளுநர் நியமிக்கப்படுவார் என்று ஜனாதிபதி அறிவித்தல் விடுத்திருந்தார்.

எனினும் அவர் நியமனம் வழங்கவிருந்த மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் என்ற அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு அதற்கு ஆதரவு வழங்கவில்லை.

இந்தநிலையில் முறிக்கொள்வனவு மோசடி என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் குற்றமற்றவர் என்ற அடிப்படையில் அவரை மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரதமர் கொண்டிருந்தார்.

எனினும் ஜனாதிபதியை பொறுத்தவரை அர்ஜூன் மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக கருதினார்.

அத்துடன்; அவரை மீண்டும் நியமிக்க வேண்டாம் என்று குடியியல் அமைப்புக்களும் ஜனாதிபதிக்கு அழுத்தத்தை கொடுத்து வந்தன.

இந்தநிலையில் மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்க ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் மற்றும் பிரதமருக்கு உள்ள அரசியல் மூலதனம் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மத்தியஸ்த பங்கும் இருந்ததாக குறித்த செய்தி இணையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.