Header Ads



சுவிஸ் மக்கள் குறித்து, அதிர்ச்சியான தகவல்..!

சுவிஸ் மக்கள் அண்டை வீட்டாரை வேவு பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

சுவிசில் கருத்து கணிப்பு நிறுவனம் ஒன்று சுமார் 1000 பேரிடம் நடத்திய ஆய்வில் தான் இது தெரிய வந்திருக்கிறது.

இதன்படி, சுமார் 22 சதவீத மக்கள் அண்டை வீட்டாரை வேவு பார்ப்பதை ஒத்துக் கொண்டனர். அவர்கள் தொலைநோக்கி, கமெரா, மொபைல் போன் மற்றும் வீட்டின் ஜன்னல் வழியாக அண்டை வீட்டாரை வேவு பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 28 சதவீத மக்கள் பக்கத்து வீட்டின் மரம், செடி, கொடிகளை பார்ப்பதாகவும், 24 சதவீத மக்கள் வீட்டை அவர்கள் எவ்வாறு புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் 18 சதவீத மக்கள் எதிர்வீட்டு குழந்தைகளின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதாக கூறியுள்ளனர். மேலும், 13 சதவீத மக்கள் எதிர்வீட்டில் இருக்கும் கணவன், மனைவிகளை வேவு பார்ப்பதாக கூறியுள்ளனர்.

இவர்களில் 15-29 வயதுடைய மக்கள் தான் இது போன்ற நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதாகவும், 60-74 வயதுடைய மக்கள் இவற்றை எல்லாம் கண்டு கொள்வதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தங்கள் வீட்டின் பால்கனி, மொட்டை மாடி, சமையல் அறை, படிக்கட்டு, படுக்கை அறைகளில் இருந்து கொண்டு எதிர்வீட்டை வேவு பார்த்து ரசிப்பது தான் பிடிக்குமாம். எதிர்வீட்டில் இருப்பவர்களே உஷாராக இருந்து கொள்ளுங்கள்..!

No comments

Powered by Blogger.