Header Ads



மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமியர்கள் - இப்தார் நிகழ்வில் ஜெயலலிதா

இறைப்பற்று உள்ளவர்களை எந்த துன்பமும் அணுகாது : இஃப்தார் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு....!!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒவ்வொரு ஆண்டும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

சென்னையில் நேற்று -02- அதிமுக சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமிய பிரமுகர்கள், இந்து மத ஆன்மீக தலைவர்கள், கிறித்தவ மத தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,

நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை ஏற்காதவர்கள் நபிகள் நாயகம் அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வேளையில் சிலந்தி வலையினால் காக்கப்பட்ட செய்தியை அழகாக மேற்கோள் காட்டி...

இறைவனை எப்போதும் உள்ளத்தில் கொண்டுள்ளவர்கள் இறைவனால் எப்போதும் காக்கப்படுவார்கள்.

இறைப்பற்று உள்ளவர்களை எந்த துன்பமும் அணுக இயலாது,

இஃப்தார் நோன்பு திறப்பு கொடையையும், அன்பையும் பறை சாற்றுகிறது, எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு மனிதநேயம் இருக்கும், எங்கு மனிதநேயம் இருக்கிறதோ அங்கு ஒற்றுமை நிலவும், அறம் தழைக்கும், ஏழ்மை விலகும், நன்மை பெருகும்.

இறை நம்பிக்கையுடைய இஸ்லாமிய பெருமக்களாகிய நீங்கள் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடித்து இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப மனிதநேயத்திற்கும், அன்பிற்கும் எடுத்துக்காட்டாக நிச்சயம் விளங்குவீர்கள்.

மேற்கண்டவாறு ஜெயலலிதா பேசினார்.

2 comments:

  1. Good to hear, if it's really from the bottom of her heart! and not just from her lips. because most politicians do lip service!

    ReplyDelete

Powered by Blogger.