Header Ads



தம்­புள்­ளை பள்ளிவாசல் ரணிலின் கவனத்திற்கு - முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனம் குறித்து கவலை

பல வரு­டங்­க­ளாக சவால்­க­ளுக்கும் எதிர்ப்­பு­க­ளுக்கும் உள்­ளா­கி­யி­ருக்கும் தம்­புள்ளை பள்­ளி­வா­ சலை புதிய இட­மொன்றில் நிர்­மா­ணிப்­ப­தற்கு அரசு இணங்­கி­யி­ருந்­தாலும் இதனை வேண்­டு­மென்றே நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைத் தலைவர் தாம­தப்­ப­டுத்தி வரு­வ­தா­கவும் இது தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் முறைப்­பாடு செய்­துள்­ள­தா­கவும் மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கார ‘விடி­வெள்ளி’ க்குத் தெரி­வித்தார்.

தம்­புள்­ளையில் இன முரண்­பா­டுகள் ஏற்­ப­டாது தடுத்து இனங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் நோக்­கோடு தம்­புள்ளை பள்­ளி­வா­சலை வேறோர் இடத்தில் நிர்­மா­ணிப்­ப­தற்கு காணி­யொன்று வழங்­கு­வ­தற்­காக ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளும்­படி நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பைக்கு அறி­வு­றுத்­தப்­பட்டு பல மாதங்கள் கடந்­து­விட்ட பின்பும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை இது விட­யத்­தில அக்­க­றை­யின்றி இருப்­ப­தா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கார குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில்;
‘தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு பல வரு­டங்கள் கடந்­து­விட்­டன. அப்­பள்­ளி­வாசல் தம்­புள்ளை புனித பூமியில் தற்­கா­லிக கூடா­ர­மாக அமைந்­தி­ருப்­ப­தாக பௌத்த குரு­மார்கள் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கி­றார்கள். அங்­கி­ருந்து பள்­ளி­வாசல் அகற்­றப்­பட வேண்டும் என்­கி­றார்கள். இதனால் தம்­புள்­ளையில் இரு சமூ­கங்­க­ளுக்கு இடையில் விரிசல் நிலை தோன்­றி­யுள்­ளது.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாக சபையும் பள்ளி வாசலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொள்ள விருப்பம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கான காணி­யொன்று தம்­புள்ளை நகரில் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தென்­றாலும் அதனை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கு­வதில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைத்­த­லைவர் இழுத்­த­டிப்­பு­களை மேற்­கொண்டு வரு­கிறார்.

இது இப்­ப­கு­தியில் மீண்டும் இன முரண்­பா­டுகள் வளர்­வ­தற்கு கார­ண­மா­க­வுள்­ளது.

இது தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடமும் முறைப்­பாடு செய்­தி­ருக்­கிறேன். தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு தாம­த­மில்­லாது தீர்வு வழங்­கு­மாறு பிர­த­மரைக் கோரி­யுள்ளேன் என்றார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் மேல­திக தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்­ணான்­டோவை அவ­ரது கைய­டக்கத் தொலை­பே­சி­யூ­டாக தொடர்­பு­கொள்ள முயற்­சித்தும் அதில் பலன் கிடைக்­க­வில்லை.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் உறுப்­பினர் எஸ்.வை.எம். சலீம்­தீனை தொடர்பு கொண்டு பள்­ளி­வாசல் அகற்­றப்­ப­டு­வது தொடர்பில் வின­வி­யபோது அவர் பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார்.

‘நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தம்­புள்ளை இ.போ.ச டிப்­போ­வுக்கு அருகில் காணி­யொன்­றினை இனங் கண்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. இக்­காணி தம்­புள்ளை பள்­ளி­வாசல் தற்­போது அமைந்­துள்ள இடத்­தி­லி­ருந்து ½ கிலோ மீற்றர்  தூரத்­திலே உள்­ளது.

ஆனால் பள்­ளி­வா­ச­லுக்கு வழங்­கு­வ­தற்கு இனங்­கா­ணப்­பட்­டுள்ள காணி இது­வரை பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­ற்கு காண்­பிக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு எமக்கு காண்­பிக்­கப்­பட்­டாலே அக்­காணி பள்­ளி­வா­சலை நிர்­மா­ணிப்­ப­தற்கு உகந்த இடமா என்­ப­தனைத் தீர்­மா­னிக்க முடியும்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை இது விடயத்தில் தனது கடமைகளைத் துரிதப்படுத்துவதற்கு முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்காமல் மௌனம் சாதிப்பது கவலைக்குரியது.

முஸ்லிம் அமைச்சர்கள் இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் பள்ளிவாசல் நிர்மாணத்துக்கு வசதியான காணியினைப் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.