Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு அவசியமான, சில பயனுள்ள குறிப்புகள்


-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

நல்லவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், மிகச் சிறிய தொகையினரான கெட்டவர்கள் உலகை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளனர்.

அதுபோல் தான் நமது நாட்டிலும் மிகச் சிறிய தொகையினரான தீய சக்திகள் இன மத போர்வைக்குள் நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆத்திர அவசர எதிர்வினையாற்றல்களை அவர்கள் எங்களிடமிருந்து எதிர்பார்கின்றார்கள், உயிரிலும் மேலான அல்லாஹ்வையும், அவன் தூதரையும் புனித ராமளானில் தூற்றுவதனை விட முஸ்லிம்களை வம்புக்கு இழுக்க வேறு என்ன வேண்டும்..?

முஸ்லிம்கள் மிகவும் நிதானமாகவும் சகிப்புத் தன்மையுடனும் இப்போழுது நடந்து கொள்கின்றார்கள். அல் ஹம்துல்லாஹ் .

கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்ற நாம் பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துதல் வேண்டும்.

பிரதேசத்தில் உள்ள அரசியல் தலைமைகள், கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள், அரச அதிபர்கள், பொலிஸ் நிலைய பெரறுப்பதிகாரிகளுடன் சுமுகமான உறவுகளை வைத்திருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு மஹல்லாவிலும் சகல தர்ப்புக்களையும் உள்வாங்கிய ஷூரா சபைகளை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும், அவற்றினூடாக பிராந்திய மற்றும் தேசியத் தலைமைகளை அவ்வப்போது தொடர்பு கொள்தல் வேண்டும்.

தமது மஸ்ஜிதுகளில் வர்த்தக நிறுவனங்களில் CCTV காமராக்களை பொருத்திக் கொள்ளுதல் , உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுதல்.

இயன்றவரை வியாபார நிறுவனங்களை ஹலால் காப்புறுதி செய்து கொள்தல்.

அவ்வப்போது தமது இருப்புக்கு அல்லது பாது காப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப் படுமிடத்து உடனடியாக சட்ட நட வடிக்கைகளை எடுத்தல், சட்டத் தரணிகளின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள நிதியம் ஒன்றை தாபித்துக் கொள்தல்.

தேசிய அளவில் செயற்படும் ACJU, NSC, MCSL, RRT, ARC போன்ற சிவில் அமைப்புக்களுடனும் ஏனைய அரசியல் தலைமைகளுடனும் அவ்வப்பொழுது தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக் கொள்தல்.

தேவைப்படுமிடத்து....பேனை இன்றேல் பென்சிலாவது இருந்தால் தானே தகவல்களை தவறாது பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறான ஆக்கபூர்வமான முன்னேற்பாடுகளை ஒவ்வொரு ஊரிலுமுள்ள இளைஞர்கள் புத்திஜீவிகள் முன்னின்று மேற் கொள்தல்.

No comments

Powered by Blogger.