Header Ads



துருக்கியில் அவசரகால நிலைமை - எர்துகான் பிரகடனம்

துருக்கியில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ சதிப் புரட்சியைத் தொடர்ந்து துருக்கியின் ஜனாதிபதி Recep Tayyip Erdogan  அந்நாட்டு அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அவசரகால நிலைமை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இராணுவ சதிப்புரட்சியில் இணைந்துகொண்ட 10000 பேர் வரையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் தடுப்புக் காவல் காலம் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

600 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக் கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடு கிடையாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.