July 18, 2016

"முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள், பல்கலைக்கழகங்களுக்குள் பாய முனைந்தபோது அரணாக நின்றது சிங்களவர்களே"

-Vtm Imrath - ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்-

எடுத்தவுடனேயே "சிங்களவன் துவேசி" என்றும் கூறும் யாருடனும் நான் அதிகமாக பேசுவதில்லை: சிரித்துக்கொண்டே பேச்சை மாற்றிவிடுவேன்!

யாழ் பல்கலைக்கழக அசம்பாவிதம் இரண்டு நாட்களாக மனதில் 'தி்க் திக்' என்று அடிக்கிறது!

நீண்டகாலமாக கசிந்துகொண்டிருந்த நெருப்பு அது! வெடித்துவிட்டது!

தமிழ் மாணவர்கள் என்றுமே உணர்வுகளால் வேறுபட்டவர்கள்: நொந்து போனவர்கள் அவர்கள்!

பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் சரி வெளியேயும் சரி, மிகவும் சங்கடப்படுத்தப்படுபவர்கள்.

பகடிவதையின் உச்சத்தை தொடுமளவு மிகவும் பயங்கரமான தாக்குதல்களை கடந்துதான் அவர்கள் சாதிப்பது!

முஸ்லிம்கள் எந்தளவு மத கடமைகளுக்கு முக்கியம் கொடுப்பார்களோ அதே போன்றுதான் தமிழர்கள் கலாச்சாரத்திற்கு முக்கியம் கொடுப்பது!

நாங்கள் தொழுகயறை கேட்பது போல், அவர்கள் கோயில் கேட்பதில்லை: அவர்களின் கலாச்சாரத்திற்கான முழு உரிமையை மட்டுமே அடையப்பார்பார்கள்!

எதையுமே ஓர் இழப்பு போலத்தான் பார்ப்பார்கள்: தமிழர்கள் என்ற தனித்துவ விடயத்தில் சிறிய விட்டுக்கொடுப்புகளையும் அநீதிகளாகத்தான் பார்ப்பார்கள்!:

ஆம் அவர்கள் கடந்து வந்த வரலாறு அப்படித்தான்: அவர்கள் கற்றுக்கொண்ட பாடம் அப்படித்தான்.

சிங்களவர்களோ எதையுமே அரசியல் ரீதியாக பார்ப்பவர்கள்: நாட்டுப்பற்று மிக்கவர்கள்: கடின உழைப்புக்கு தயங்காதவர்கள்: புத்தரை விட பௌத்தமதம் முக்கியம் என கருதுபவர்கள்: பௌத்த மதத்தை விட பௌத்த துறவிகளை மதிப்பவர்கள்: சிங்கள கலாச்சாரங்களை பேனுவது நாட்டைப் பாதுகாப்பதை போல் நினைப்பவர்கள்.

யாழ் பல்கலையில் இடம்பெற்ற 'வெல்கம் பார்டி' சம்பவம் தொடர்பாக பேசுவதற்கு முன் ஜ'புர பல்கலை பற்றி இரண்டு வரிகள் பேசியாக வேண்டும்.

10500 மாணவர்களுக்கு வெறும் 400 தமிழர்களும் 200 முஸ்லிம்களும் கல்வி கற்கும் ஓர் பல்கலைக்கழகம் ஜ'புர.

99% சிங்கள மரபுகளை பேனி அமைந்த ஓரு வளாகம். (சிங்கள பிரிவனாவாக இருந்த இடம்)

ஆனால் அங்கு எந்த விழாவாக இருந்த போதிலும் அதில் தமிழ் தரப்புக்கு தாராளமாக களம் கொடுக்கப்படும்.

'வெல்கம் பார்டி'களில் தமிழ் கலாச்சார நடனங்களும் சரி தமிழ் பண்பாடு பேனும் நிகழ்வுகளும் சரி தாராளமாகவே நடைபெறும்.

நடுச்சந்தியில் வைத்து பொங்கள் பொங்கவும்: நடு மண்டபத்தில் வைத்து சிவராத்திரி கொண்டாடவும் கூட அனுமதி உண்டு!

புதுவருட கொண்டாட்டங்களிலும் தமிழர்களுக்கு பங்கு கொடுப்பதுண்டு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூட ஒரு சோசலிச போக்குடையது (ஜே.வி.பி. போல) அங்கு இனவாதம், பண வாதம், பிரதேச வாதங்கள் கிடையாது!

இப்படியான ஒரு பார்வையோடு யாழ் பல்கலைக்கழக சம்பவத்தை திரும்பிப்பார்ப்போமானால், நமக்கு பேரதிர்ச்சிதான் மிஞ்சும்! அங்கு இனவாதம் பல சந்தர்ப்பங்களில் தலைதூக்க முனைந்துள்ளது. இல்லை இல்லை தூண்டப்பட்டுள்ளது!

நான் முன்பு கூறியது போல தமிழர்கள் கலாச்சார விடயத்தில் ரொம்ப ஸ்டிரிக்ட் ஆனவர்கள். கலாச்சாரத்தை விடுதல் என்பது தமிழின ஒடுக்குதல் என்றே நினைப்பவர்கள். எனவே தான் அவர்கள் எமது மரபுகள் மாற்றப்படக்கூடாது என்று கூறிக்கொண்டுருத்தார்கள்!

ஆனால் சிங்களவர்களோ அவர்களின் கலாச்சாரம் நாட்டின் சரத்து சட்டம் என்ற ஓர் எண்ணுகை கொண்டவர்கள் என்பதால், அவர்களும் அதனை விட விரும்பவில்ல! அவர்களின் சிந்தனை அரசியல் ரீதியாக பாய்ந்துவிட்டது!

இங்குதான் தமிழர் முஸ்லிம்கள் ஆகிய நாம் மிகவும் காருண்யமாக நடந்து கொள்ள வேண்டும்.

விட்டுக்கொடுத்தல் என்றுமே நடக்கக்கூடாது தான்
ஆனால் அவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட வேண்டும். அதே நேரம் நாமும் நமது கலாச்சாரத்தை பேன வேண்டும்!

தமிழ்பேசும் மாணவர்கள் சிறுபான்மையாக இருக்கும் பல்கலைக்கழகங்களில் அவர்கள் பின்பற்றும் ஒழுக்க நெறிகளை நாமும் பின்பற்ற வேண்டும்!

அவர்கள் துவேசிகள் அல்லர்: மாறாக அதிதீவிர இலங்கை பற்றர்கள்!

நமக்கும் சேர்த்துத்தான் அவர்கள் போராடுவது.

சப்ரகமுவவில் ஒரு தமிழ் மாணவனை புலிப்பயங்கரவாதியாக கைது செய்த போது வீதிக்கிறங்கியது சிங்களவர்களே!

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறைகள் பல்கலைக்கழகங்களுக்கு பாய முனைந்த போது அறணாக நின்றது சிங்களவர்களே!

மொழி சம உரிமைக்கும் இன்னும் பல சம உரிமைக்கும் குரல் கொடுப்பது சிங்களவர்களே!

நாம் பல வகையில் அவர்களுக்கு கடமைப்பட்டவர்கள் சகோதரர்களே!

சின்னஞ்சிறிய மாணவர் கலகங்கள் எல்லாம் அரசியலாக்கப்படும் மிகவும் மோசமான ஓரு சூழலி்ல் நாம் வாழ்த்துகொண்டிருக்கின்றோம்!

மீண்டும் பிளவுகளும் சச்சரவுகளும் நமது பூமியில் வேண்டாம்!

விட்டுக்கொடுக்க மாட்டோம்: ஆனால் சேர்த்து நடப்போம்!

13 கருத்துரைகள்:

NICE BROTHER, U R GREAT AND YOUR THOUGHT, DEAR ALL PLS UNDERSTAND EACH OTHER AND LIVE TOGETHER

இலங்கையில் இலங்கையராய் வாழ்வதற்கு புரிந்துணர்வோடு கற்கவேண்டிய பல்கலைப் பாடங்கள்.

Thanks for sharing this brother. I also experienced same way u did.

Very Good Thinking Thank you Brother

Incorrect heading but good contents.
In my university experience in Southern SL, Mostly problem creators were Muslim students.

காலத்துக்கு ஏற்ற கட்டுரை.

Very very good you university life n understand.

மனிதனை மனிதன் மதிக்க தெரிந்தால். இவ்வளவு பூதாகாரமாக்கப்பட்டிருக்காது. பல்கலைக்கழக மாணவன் என்றால் கெத்து ஒரு படி மேல தான் என்ற பாணியில் அவர்கள் இதை கையாள முயறசி செய்திருப்பார்கள்.

போக போக புறிந்துகொல்வார்கள்...
நல்ல பதிவு.... நன்றி சகோ. இம்ராத்

மனிதனை மனிதன் மதிக்க தெரிந்தால். இவ்வளவு பூதாகாரமாக்கப்பட்டிருக்காது. பல்கலைக்கழக மாணவன் என்றால் கெத்து ஒரு படி மேல தான் என்ற பாணியில் அவர்கள் இதை கையாள முயறசி செய்திருப்பார்கள்.

போக போக புறிந்துகொல்வார்கள்...
நல்ல பதிவு.... நன்றி சகோ. இம்ராத்

Tamils immuned in Racism,andRevenge, They are selfish , while prey at temple they ask the god that others should not be rich , clever except them Because of that mentality their identity gradually fading, In another 100 years they would be called English speaking Tamils

Yes we know whu r u. Nowadays all of them know whu creating problems between community and whu are the real fundemendalist in this problem. U peoples minds are totaly covered by revenge. 1St wash ur community after that put ur dirty hands to others

Post a Comment