July 17, 2016

ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் பாராட்டும், நன்றிக் கடனும்


கடந்த 2016-05-16ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டிய முஸ்லிம் ஸ்தாபனங்களுக்கும், மஸ்ஜித் சம்மேளனங்களுக்கும், பரோபகாரிகளுக்கும் பாராட்டு வைபம்  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் அதனது தலைவர் எம்.ஜ.எம். முப்தி ரிழ்வி தலைமையில் நடைபெற்றது. 

அதிலே பின்வரும் அமைப்புகள் கலந்து கொண்டு பாராட்டுகளையும் நினைவுச் சின்னங்களையும் பெற்றுக் கொண்டன.

Jama’athus Salamah - Sri Lanka  
CDMF - Colombo District Masjids Federation (12)
SLJI - Sri Lanka Jamaat e-Islami
National Council YMMA – Maligawatta
All Ceylon YMMA Conference – Dematagoda
ARC – Advocacy and Reconciliation Council
Jabalur Rahma - Mountain of Mercy
Kandy City Federation
Kandy City Branch – ACJU
Kandy Muslim Traders Association
Mawanella Janaza Welfare Association
Kalkuda Branch - ACJU & Masjidus Shoora – Kalkuda
Jamiul Khairath - Madawala Bazar
Kolonnawa Jumma Masjid
Kolonnawa Branch – ACJU

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அவர்கள் பொதுப்பணிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியதோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பைத்துஸ்ஸகாத் வழிகாட்டல்களையும் அனைத்து மஸ்ஜித்களும் நடைமுறைப்படுத்த வேண்டுமென ஆர்வ மூட்டினார்கள்.

சமூக சேவை ஒரு இஸ்லாமிய கடமை என்ற தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரும் , ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப்; பணிப்பாளருமான அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ஜம்இய்யாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்  வெள்ள அனர்த்தத்தில் ஜம்இய்யாவின் நடவடிக்கைகள் மற்றும் வரவு செலவுகள் தொடர்பான பூரண தெளிவொன்றை சபையோருக்கு வழங்கினார்கள். 

இந் நிகழ்வில் கலந்து கொண்ட சகலரும் ஜம்இய்யாவின் முயற்சியைப் பாராட்டியதோடு தங்களது கருத்துக்களையும் முன்வைத்தார்கள். சமூகத்திற்குத் தலைமை தாங்கும் தகைமையும் பொறுப்பும் ஜம்இய்யாவிற்கே உள்ளது, சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நாம் ஜம்இய்யாவின் வழிகாட்டல்களையே எதிhப்;பார்த்திருக்கின்றோம். ஜம்இய்யா இன்றுபோல் என்றும் தனது சேவையைத் தொடரவேண்டும் என சபையோர் ஏக மனதாக  வேண்டிக் கொண்டனர். 

இறுதியாக ஜம்இய்யாவின் கௌரவ பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். கூட்டம் இனிதே கப்பாறதுல் மஜ்லிஸுடன் நிறைவுற்றது. 

5 கருத்துரைகள்:

சகல விதத்திலும் உதவியாக இருந்த sltj எங்கே?

எனக்குத் தெரிந்த வகையில் வில்பொலை அல்மனார் ஜூம்ஆப் பள்ளி பரிபாலன சபை,வில்பொலை ஜனாஸா நலன்புரி சங்கம் ஆகிய இரண்டும் இணைந்து எலங்கபிடிய,சிரிபுர பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு அழிவின்போது உடனடியாக களத்தில் இறங்கி பணியாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு திப்பிடிய விகாரையின் விகாராதிபதியுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர்,சமைத்த உணவு போன்றவற்றை வழங்கி தொடர்ந்தும் வில்பொலை பள்ளிவாயல் ஊடாக நிவாரணப் பணிகளை மேற்கொண்ட இரண்டு நிறுவனங்களும் இங்கு குறிப்பிடப்படவோ அல்லது சான்றிதழ் வழங்கப்படவோ இல்லை. பொதுமகன் என்றவகையில் அதற்கான காரணத்தை இலங்கை ஜம்மியதுல் உலமா சபை அறிவிக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

Naattil innum eraalamanawarkal saidarghal. Jammiyathul Ulamawudan Inaindu saidhawarghal ingu gourawikka pattarghal.

இன்னும் எத்தனையோஅமைப்புகள் களளத்தில் குதித்தது யாரும் கோபப்பட வேண்டாம் SLTJ எங்கே இவார்கள் காணவிலையா அல்லது இவர்களின் வழமையான குரோதம் இதிலும் பின்பற்றப்பட்டதா

கலத்தில் ஈடுபட்ட அழைப்பு விடுத்துள்ளார்கள். நிகழ்வில் கலந்து கொண்டோர்களின் பெயர்கள்தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது போல் இருக்கிறது.

Post a Comment